கர்நாடகத்தின் ஹிஜாப் தொடர்பான மனுக்கள் மீது அம்மாநில உயர்நீதிமன்றம் இன்று பிற்பகல் விசாரணையைத் தொடங்குகிறது.
மாணவர்கள் அமைதி காக்கும்படி நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. சட்ட அரசியல் விதிகளின் படி இப்பிரச்சினையை அணுகப் போவதாகவும் உணர்ச்சிப்பூர்வமான அணுகுமுறை இருக்காது என்றும் உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
மாநிலம் முழுவதும் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தியதில் பெரும் வன்முறை தலைவிரித்தாடியது.
இதையடுத்து சில பகுதிகளில் 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாண்டியாவில் உள்ள கல்லூரியில் முற்றுகையிட்ட மாணவர்கள் மத்தியில் பதில் கோஷம் எழுப்பிய மாணவிக்கு 5 லட்சம் ரூபாய் பரிசாக முஸ்லிம் அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
0 Comments