நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளை மூட உத்தரவு !

 


பிரபல முன்னணி பாடகியான லதா மங்கேஷ்கர் இன்று காலையில் கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 8.30 மணிக்கு உயிரிழந்தார்.

இன்று பிப்ரவரி 6ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு அவருக்கு இறுதி மரியாதை செய்யப்படும் எனவும் தற்போது மும்பையில் உள்ள அவரது சொந்த வீட்டில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது

திரைப் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் லதா மங்கேஷ்கர் உடலுக்கு இறுதி மரியாதை நேரில் சென்று செலுத்துகின்றனர் மேலும் இரு நாட்கள் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் இறக்கிவைத்து துக்கம் அனுசரிக்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

நாளை மகாராஷ்டிராவில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது அதுபோன்று மேற்கு வங்காளத்திலும் அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் பிரதமர் மோடி மும்பை வருவதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments