137 நாள்களுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையும் அதிகரிப்பு!

இந்தியாவில் உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்படாமல் இருந்து வந்தது. 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்ட நிலையில் இன்று பெட்ரோல் டீசல் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை உயரும் எனக் கூறப்பட்டது. ஆனாலும், 5 மாநில தேர்தலுக்குப் பின் இந்த உயர்வு இருக்கலாம் என்றும் பேசப்பட்டது. ஏறத்தாழ 137 நாள்களுக்குப் பின்னர் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

காஸ் சிலிண்டர்

அதைத் தொடர்ந்து, சென்னையில் பெட்ரோல் விலை 76 காசுகள் அதிகரித்து 102.16 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 77 காசுகள் உயர்ந்து 92.65 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. சிலிண்டருக்கு 50 ரூபாய் உயர்ந்து 967.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.



from Latest News https://ift.tt/eLYJKGs

Post a Comment

0 Comments