``இங்க இருந்த செல்போன் டவரை காணவில்லை” - ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் புகார்

தமிழ் திரைப்பட நகைச்சுவை ஒன்றில், வெட்டி வச்சிருந்த கிணத்தை காணோம்னு 'வடிவேல்' போலீஸில் பரப்பரப்பான புகார் கொடுப்பது போல, சேலம் காவல்நிலையம் ஒன்றில் செல்போன் டவர் காணோம்னு வந்திருக்கும் புகாரால் போலீஸார் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

சேலம் கன்னங்குறிச்சி, மகேந்திரபுரி, சிவாஜி சாலையில் சின்னதுரை என்பவருக்கு சொந்தமான இடம் இருக்கிறது. இதில் கடந்த 2006 -ம் ஆண்டு ஏர்செல் நிறுவன மூலம் செல்போன் டவர் அமைக்கப்பட்டது. 2018 வரை இயங்கிய ஏர்செல் நெட்வொர்க் அதற்கு பின் தங்களது சேவைகளை நிறுத்தி கொண்டதால், டவர் பயன்பாடு நிறுத்தி வைக்கப்பட்டது.

மொபைல் டவர்

பின்னர் கடந்த 2021- ம் ஆண்டு டவர் ஆய்வுக்காக வந்த ஜி.டி.சி., இன்ப்ராஸ்ட்ரெக்சர் பிரைவேட் லிமிடெட் நிறுவன அதிகாரிகள், டவர் இருந்த இடம் தரிசு நிலமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து தங்களது நிறுவனத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் அந்நிறுவன ஊழியர் சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த தமிழரசன் என்பவர் ``27 லட்சத்து, 69 ஆயிரத்து, 243 ரூபாய் மதிப்பிட்டில் கட்டப்பட்ட செல்போன் டவர் காணவில்லை கண்டுப்பிடித்து தாருங்கள்” மாநகர குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். அதன்மூலம் கன்னங்குறிச்சி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.



from Latest News https://ift.tt/mO793Yd

Post a Comment

0 Comments