புதுக்கோட்டை: சிறுமிக்கு பாலியல் தொல்லை... உறவினருக்கு சாகும் வரை ஆயுள் - மகிளா நீதிமன்றம்

தஞ்சாவூர் மாவட்டம் பூவானம் பகுதியைச் சேர்ந்த15 வயது சிறுமியை, புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வானக்கன்காட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார் அச்சிறுமியின் தாய். அப்போது, சிறுமியின் தயாரின் சகோதரர் முருகேசன்(36) சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், முருகேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

கடந்த 2020-ம் ஆண்டு முதல் புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் தற்போது இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக, முருகேசனுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளிதார். அதோடு, ரூ.30ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதத்தைக் கட்டத்தவறினால், மேலும் ஓராண்டு சிறை அனுபவிக்க வேண்டும். மேலும், சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.



from Latest News https://ift.tt/Nq5F0wP

Post a Comment

0 Comments