மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா-வில் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்...! - பீதியில் மக்கள்

இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா தீவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அமெரிக்கப் புவியியல் ஆய்வகம், "இந்தோனேசியா சுமத்ரா தீவின் மேற்கே 167 கி.மீ தொலைவில் இன்று அதிகாலை 4:06 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அதன் ரிக்டர் அளவு 6.7 எனக் கணக்கிடப்பட்டுள்ளது. சுமத்ரா மாகாணத்தின் தலைநகரான படாங்கிலிருந்து 167 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளதாகவும், அதனால் மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் அதிர்ந்ததால் மக்கள் வீட்டைவிட்டு பதற்றத்துடன் வெளியேறியதாகவும் முதல்கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்தோனேசியா தீவில் நிலநடுக்கம்!

மேலும், `மிதமான ஒரு நிமிடம் நிலநடுக்கம் உணரப்பட்டது’ என்று தேசிய பேரிடர் தணிக்கை நிறுவனம் ஆரம்ப அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதே போல, பிலிப்பைன்ஸின் தலைநகர் மணிலாவின் அருகில் இருக்கும் லூசன் தீவு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் ரிக்டர் அளவு 6.4 எனப் பதிவாகியுள்ளது என நில அதிர்வு கண்காணிப்பு தேசிய மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம்

மேலும், மலேசியாவின் கோலாம்பூரிலிருந்து 504 கி.மீ தொலைவில் 6.8 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த சக்தி வாயந்த் நிலநடுக்கத்தால் வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் அதிர்ந்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்து வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதாரங்கள் குறித்து ஏதும் தகவல்கள் வெளியாகவில்லை.



from Latest News https://ift.tt/iAx0l7r

Post a Comment

0 Comments