என் வயது 43. ஒல்லியான உடல்வாகுடன் இருக்கிறேன். ஒவ்வொரு முறை தாம்பத்திய உறவு முடிந்ததும் அதீத களைப்பாக உணர்கிறேன். அந்த நிலையிலிருந்து என் உடல் சகஜ நிலைக்குத் திரும்ப இரண்டு நாள்கள் ஆகின்றன. இது ஏன்?
- அதிக் அம்ஜெத் (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் விஜயா கணேஷ்.
``தாம்பத்திய உறவுக்குப் பின் ஏற்படும் அதீத களைப்புக்கு உங்கள் உடலில் சத்துக்குறைபாடு ஏற்பட்டிருப்பதுதான் பிரதான காரணமாக இருக்கும். குறிப்பாக வைட்டமின் டி, மக்னீசியம் மற்றும் துத்தநாகச் சத்துக் குறைபாடுகள் காரணமாக இருக்கலாம்.
சத்துக்குறைபாடு என்பது உடலின் பிற இயக்கங்களை பாதிப்பதைப் போலவே தாம்பத்திய உறவையும் பாதிக்கும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. எனவே நீங்கள் மருத்துவரை அணுகி, சத்துக்குறைபாட்டுக்கான அறிகுறிகளைச் சொல்லி, அவற்றுக்கான பரிசோதனைகளைச் செய்து பார்த்து, சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.
மேற்குறிப்பிட்ட சத்துகள் உள்ள உணவுகளையும் தேர்ந்தெடுத்துச் சாப்பிடுங்கள். இன்னும் சிலருக்கு தாம்பத்திய உறவு முடிந்ததும் நல்ல தூக்கம் வரும். தாம்பத்திய உறவு முடிந்தபிறகு உடலில் சுரக்கும் ஹார்மோன்தான் அதற்கு காரணம். எனவே அது குறித்துக் கவலைகொள்ளத் தேவையில்லை."
உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
from Latest News https://ift.tt/MjayHIh
0 Comments