https://gumlet.assettype.com/vikatan/2022-02/ba5e1407-c3fa-4795-b45f-3a76d15001a8/WhatsApp_Image_2022_02_03_at_4_04_18_PM.jpeg''சசிகலா, தினகரன் இல்லாவிடின் கட்சி காணமல் போய்விடும்!'' - அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி

தேர்தல் தோல்வி காரணமாக சசிகலா, டி.டி.வி தினகரனை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று தேனி அதிமுக மாவட்ட செயலாளர் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிமுக கோவை முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி நம்மிடம் கூறுகையில்,

சசிகலா

``தற்போதைய அதிமுக தலைமையின் மீது உடன்பாடு இல்லாததால் சற்று விலகி இருந்தேன். அம்மா மறைவுக்கு பிறகு சந்தித்த சட்டசபை, உள்ளாட்சி என அனைத்து தேர்தல்களிலும் தோல்வியை தான் சந்தித்துள்ளோம்.

கரைவேட்டியுடன் வெளியில் நடக்க முடியாத சூழல் நிலவுகிறது. ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் முடிந்தவரை செய்து பார்த்தனர். ஆனால், அவர்களால் முடியவில்லை. மக்கள் தலைவராக செயல்பட முடியவில்லை. மக்களும் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்

ஒன்றரை கோடி தொண்டர்கள் வேதனையில் இருக்கின்றனர். கட்சியை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஒற்றை தலைமை இருந்தால்தான் நிலைமை மாறும்.

சசிகலா தான் கட்சி தலைமையை ஏற்க வேண்டும். சசிகலா மற்றும் தினகரனால் தான் கட்சியை வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியும். இல்லையென்றால் கட்சி காணாமல் போய்விடும்.” என்றார்.

ஆறுக்குட்டி

ஓ.பி.எஸ் தர்மயுத்தம் செய்தபோது முதல் ஆளாக ஆதரவு தெரிவித்தவர் ஆறுக்குட்டி. தற்போது சசிகலாவை இணைக்கும் முடிவுக்கும் அதே ஆறுக்குட்டி முதல் ஆளாக ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



from Latest News https://ift.tt/rJRwFOt

Post a Comment

0 Comments