குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 52 வயதான மணீஷ் டேவ் என்பவர் சாத்தியா எனும் உணவகத்தை உக்ரைனில் படித்து வரும் மாணவர்களுக்காக நடத்தி வருகிறார். இந்த சாத்தியா உணவகம் உக்ரைன் தலைநகரான கீவ் (Kyiv) நகரில் போகோமெலெட்ஸ் தேசிய மருத்துவப் பல்கலைக்கழகத்தின் (Bogomelets National Medical University) சர்வதேச மாணவர்களின் விடுதியிலிருந்து சுமார் மூன்று நிமிட நடைப்பயணத்தில் அமைந்திருக்கிறது.
தற்போது உக்ரைனின் தலைநகரில் ரஷ்யா கடுமையான தாக்குதலை நிகழ்த்தி வருகிறது. எனவே அங்கு தங்கியிருக்கும் இந்திய மாணவர்கள் மட்டுமல்லாமல் பிற நாட்டு மாணவர்களும் உணவு, பாதுகாப்பான வசிப்பிடம் இன்றி தவித்து வருகின்றனர். இப்படியான போர் சூழலிலும் இந்தியாவைச் சேர்ந்த மணீஷ் டேவ், தன் உணவகத்தை விடுதியாக மாற்றி அங்கு இருக்கும் மாணவர்களுக்கு இலவச உணவு மற்றும் தங்கும் இடத்தையும் ஏற்பாடு செய்து அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகிறார்.
இது குறித்து மணீஷ் டெலகிராமில் ஒரு செய்தியை வெளியிட்டார் அதில் ‘இந்தியா அல்லது எந்த நாட்டையும் சேர்ந்த அன்பான நண்பர்களே, எங்களது உணவகம் அடித்தளத்தில் இயங்கி வருகிறது. இந்த இடம் நல்ல பாதுகாப்பான இடம் என்று சொல்லப்படுகிறது. இந்த நேரத்தில் தங்குவதற்கு பாதுகாப்பான இடம் இல்லை என்றால் இங்கே நீங்கள் தாங்கிக் கொள்ளலாம், நாங்கள் எங்களால் முடிந்த அளவிற்கு இலவச உணவு மற்றும் தங்குவதற்கான இடங்களை ஏற்பாடு செய்துள்ளோம். ஒற்றுமையாக சேர்ந்து உக்ரைன் பக்கம் நில்லுங்கள்.’ என்று செய்தி அனுப்பி அங்கு இருக்கும் மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் எவ்வளவு நாட்களுக்கு இதைச் செய்ய முடியும் தெரியவில்லை ‘என்னால் முடிந்த வரை’ இதைச் செய்து வருவேன் என்றும் கூறினார்.
உக்ரைன் தலைநகர் கீவில் (Kyiv) கடுமையான போர் நடந்து வரும் சூழலில் கூட இவ்வாறு மாணவர்களுக்காக உணவகம் நடத்தி வரும் மணீஷ் டேவின் இந்த மனிதநேயச் செயலைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
from Latest News https://ift.tt/XY5REk9
0 Comments