விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மாரனேரி பகுதியில் தங்கப்பாண்டி என்பவருக்குச் சொந்தமாக 'கணேஷ்வரி' எனும் பெயரில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. நாக்பூர் லைசன்சுடன் செயல்பட்டு வரும் இந்த ஆலையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. இந்நிலையில் 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று வழக்கம்போல் வேலை செய்தனர். இந்நிலையில் பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரிக்கும் போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட உராய்வின் காரணமாக பட்டாசு வெடித்தது. இதில் ஆலையின் ஒரு அறை தரைமட்டமானது.
இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி அரவிந்த் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சிவகாசி தீயணைப்புத்துறையினர் இடிபாடிகளில் சிக்கி இறந்த அரவிந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
இந்தநிலையில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த அரவிந்தின் குடும்பத்துக்கு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
from Latest News https://ift.tt/JeOCX4Y
0 Comments