சீக்கிய குரு ஸ்ரீ குரு தேக் பகதூர் 400-வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக, டெல்லி செங்கோட்டையில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடியும் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியி பேசிய மோடி, ``செங்கோட்டைக்கு அருகில் இருக்கும் புனித குருத்வாரானது, நமது பண்பாட்டைப் பாதுகாக்க குரு தேக் பகதூர் ஜி எவ்வளவு பெரிய தியாகம் செய்தார் என்பதை நமக்கு நினைவுபடுத்துகிறது. அப்போது நாட்டில் மதவெறி புயல் வீசியது. மதத்தை தத்துவம், அறிவியல் மற்றும் சுய சிந்தனை என்று கருதக்கூடிய நம் இந்தியா, மதத்தின் பெயரால் வன்முறை மற்றும் பல அட்டூழியங்களைச் செய்தவர்களை எதிர்கொள்கிறது.
பெரிய பெரிய சக்திகள் எல்லாம் மறைந்துவிட்டன. ஆனால் இந்தியா மட்டும் இன்னும் அழியாமல் நிலைத்து நின்று, முன்னேறுகிறது. அதுமட்டுமல்லாமல், இந்தியா எந்தவொரு நாட்டுக்கோ அல்லது பிற சமூகத்துக்கோ அச்சுறுத்தலாக இருந்ததில்லை. இன்றும் கூட நாம் இந்த முழு உலகத்தின் நலனுக்காகவே சிந்திக்கிறோம்" எனக் கூறினார்.
உலக வரலாற்றில் மதம், மனித விழுமியங்கள், இலட்சியங்கள் மற்றும் கொள்கைகளைப் பாதுகாக்க தன் உயிரைத் தியாகம் செய்த ஒன்பதாவது சீக்கிய குருவாக குரு தேக் பகதூர் அறியப்படுகிறார்.
from Latest News https://ift.tt/ykGwiSf
0 Comments