குஜராத்தில் கடந்த சில நாள்களாகவே, காங்கிரஸில் உள்கட்சி பூசல் நிலவுவதாகவும், அதன் காரணமாக குஜராத் மாநில காங்கிரஸின் செயல் தலைவர் ஹர்திக் படேல், காங்கிரஸிலிருந்து விலகப்போவதாகவும் செய்திகள் உலாவின. இந்நிலையில் ஹர்திக் படேல், ``காங்கிரஸின் வளர்ச்சிக்கு 100% நான் பணியாற்றியுள்ளேன். அதனை இனியும் தொடர்வேன்.
கட்சிக்குள் சிறு சிறு சண்டைகள், பழிவாங்கல்கள் இருக்கும் தான். இருப்பினும் நாங்கள் அனைவரும் ஒன்றாகச் செயல்பட வேண்டும். உண்மை பேசுவது குற்றம் என்றால், என்னை குற்றவாளியாக கருதுங்கள். குஜராத் மக்கள் எங்களிடம் எதிர்பார்க்கிறார்கள். குஜராத்தில் நல்ல வளர்ச்சியை நாங்கள் ஏற்படுத்துவோம்" எனக் கூறியிருந்தார்.
முன்னதாக, குஜராத்தின் ஆம் ஆத்மி தலைவர் கோபால் இத்தாலியா(Gopal Italia), ஹர்திக் படேலை ஆம் ஆத்மியில் சேருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய கோபால் இத்தாலியா, ``ஹர்திக் படேலுக்கு காங்கிரஸைப் பிடிக்கவில்லையென்றால், ஆம் ஆத்மி போன்ற ஒத்த எண்ணம் கொண்ட கட்சியில் அவர் சேர வேண்டும். காங்கிரஸிடம் தேவையில்லாமல் புகார் கூறி, நேரத்தை வீணடிக்காமல், இங்கு பங்காற்ற வேண்டும். ஹர்திக் படேல் போன்ற அர்ப்பணிப்புள்ளவர்களுக்கு, காங்கிரஸ் போன்ற கட்சியில் இடமிருக்காது" எனக் கூறினார்.
from Latest News https://ift.tt/w61vptY
0 Comments