பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர். ஆனால் நடிப்புக்காக மும்பையில் செட்டிலாகி இருக்கிறார். 2006-ம் ஆண்டு நடந்த `மிஸ் யுனிவர்ஸ்' அழகிப்போட்டியில் இலங்கை சார்பாக கலந்து கொண்டவர். தற்போது இலங்கை கடுமையானப் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது. இதனால் மக்கள் அத்தியாவசியப்பொருள் கிடைக்காமல் தெருவில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பொருளாதார நெருக்கடிக்குக் காரணமான ராஜபக்சே குடும்பம் பதவி விலகவேண்டும் என்று கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையைப் பார்த்து ஜாக்குலின் மிகவும் கவலை அடைந்துள்ளார்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், "எனது நாடும், நாட்டு மக்களும் படும் துயரைப் பார்க்கும்போது எனது நெஞ்சே வெடித்துவிடும்போல் இருக்கிறது. இப்பிரச்னை தொடங்கியதில் இருந்தே எனது மனதில் பல கருத்துகள் இருந்தன. ஆனால் எதைப்பற்றியும் அவசரப்பட்டு முடிவுக்கு வந்துவிடக்கூடாது. எனது மக்களுக்கு இப்போது தீர்ப்பு தேவையில்லை. மக்களுக்கு ஆதரவும், அனுதாபமும்தான் இப்போது தேவை. அங்குள்ள நிலைமை குறித்து கருத்து தெரிவிப்பதற்கு பதில் அவர்களின் மனவலிமை மற்றும் நல்வாழ்வுக்காக இரண்டு நிமிடம் மவுன பிரார்த்தனை செய்வது அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நிலைமை விரைவில் சரியாகும் என்று நம்புகிறேன். அமைதியும், மக்களின் நன்மையும் திரும்பும். இந்த நெருக்கடியைச் சமாளிக்க அவர்களுக்கு மனவலிமையை கொடுக்க பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். நடிகை ஜாக்குலின் மீது அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தி வருவதால் அவராலும் இந்தியாவை விட்டு எங்கும் செல்லமுடியாத நிலையில் இருக்கிறார். ஒரு முறை வெளிநாட்டில் நடிகர் சல்மான்கான் நிகழ்ச்சியில் பங்கே துபாய் செல்ல முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டார். இலங்கை 1948-ம் ஆண்டு சுதந்திரம் அடைந்ததில் இருந்து தற்போது இருப்பதுபோன்ற ஒரு பொருளாதார நெருக்கடியை சந்தித்தது கிடையாது. நாட்டில் அன்னிய செலாவனி கையிப்பு இல்லாமல் இருக்கிறது. மற்றொரு புறம் சீனா தான் கொடுத்த கடனை திரும்ப கொடுக்கும்படி நிர்ப்பந்தம் செய்து வருகிறது. இத்தகைய காரணங்களால் இலங்கையின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியில் உள்ளது.
from Latest News https://ift.tt/JHARzMO
0 Comments