புதிதாக பிறந்த மகன் மரணம்; சோகத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ... ஆறுதல் கூறும் ரசிகர்கள்!

கிறிஸ்டியானோ ரொனால்டோ போர்ச்சுகல் சர்வதேச அணி மற்றும் பிரிமியர் லீகின் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் நட்சத்திர கால்பந்து வீரர். இவர் வாழ்வில் நிகழ்ந்திருக்கும் ஓர் இழப்பு இன்று உலகெங்கும் இருக்கும் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கால்பந்தாட்ட சேம்பியனான ரொனால்டோவுக்கும் அவரது மனைவி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ்க்கும் புதிதாகப் பிறந்த ஆண்குழந்தை இறந்துவிட்டதே அதற்கு காரணம். இந்தச் செய்தியை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் ரொனால்டோ.

"புதிதாக பிறந்த ஆண்குழந்தை இறந்திருப்பதை ஆழ்ந்த சோகத்தோடு அறிவிக்கிறோம். எந்தப் பெற்றோரும் உணரக்கூடிய கடுமையான வலி இது. கொஞ்சம் நம்பிக்கையோடும் கொஞ்சம் மகிழ்ச்சியோடும் இந்தத் தருணத்தில் இருப்பதற்குக் காரணம் புதிதாக பிறந்த பெண் குழந்தைதான்."

கடந்த அக்டோபரில் தனக்கு இரட்டை குழந்தை பிறக்க இருப்பதாக ரொனால்டோ அறிவித்திருந்தார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ பதிவு

"இந்த இழப்பால் நாங்கள் உடைந்து போயிருக்கிறோம். பணிவோடு கேட்டுக்கொள்கிறோம் எங்களுக்கு சிறிது பிரைவசி தாருங்கள். எங்களின் குழந்தையே, நீ எங்களின் தேவதை. நாங்கள் எப்போதும் உன்னை நேசிப்போம்" என உருக்கமாகப் பதிவிட்டு இருக்கிறார்.

"உங்களுடைய வலி எங்களுடையதும்தான். அன்பையும் ஆதரவையும் இந்த நேரத்தில் உங்களுக்கு அனுப்புகிறோம்" என மான்செஸ்டர் யுனைடெட் அணி ட்விட் செய்துள்ளது. ரொனால்டோவுக்கு ஏற்கனவே இரண்டு மகள்களும் இரண்டு மகன்களும் இருக்கின்றனர். தற்போது பிறந்த இரட்டை குழந்தைகளில் மகள் நலமாக இருப்பது தங்களுக்குச் சற்று ஆறுதல் அளிப்பதாகத் தம்பதியினர் தெரிவித்திருக்கின்றனர். ரொனால்டோவின் ரசிகர்கள் கமென்ட்களில் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.



from Latest News https://ift.tt/ryJbqlB

Post a Comment

0 Comments