சேலத்தில் ஆங்கிலேயர் காலத்து `குண்டு போடும் தெரு'... பெயர் காரணம் இதுதான்!

சேலம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ஆங்கிலேயர் காலத்து பீரங்கி ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த பீரங்கிக்கு பின் உள்ள கதையை அங்கு எழுதப்பட்டுள்ள வரலாற்றுச் சுருக்கத்தை பார்த்து தெரிந்துக்கொள்ள முடிகிறது. இங்கிலாந்து மன்னர் மூன்றாம் ஜார்ஜ் 1760- 1820 காலக்கட்டங்களில் உருவக்கப்பட்ட இந்த பீரங்கி கிழக்கிந்திய கம்பெனியரால் சேலம் கொண்டுவரப்பட்டது.

ஆரம்பத்தில் சேலம் கோட்டையை பாதுக்காக்க இது பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. 1858–ம் ஆண்டு காலக்கட்டங்களில் கோட்டை அழிக்கப்பட்ட பின்பு கோட்டையின் தென் அகழி பகுதியாகக் கருதப்படும் குண்டு மேட்டுப் பகுதியில், இன்றைய `குண்டு போடும் தெரு'வில் நிறுத்தப்பட்டது. அந்த காலக்கட்டத்தில் நேரத்தை கணக்கிடுவதற்காக ஆங்கிலேயர்கள் தினந்தோறும் 12 மணிக்கு பீரங்கி மூலம் குண்டு வெடித்து மக்களுக்கு நேரத்தை அறிவித்துள்ளனர்.

பீரங்கி

அதன்பின்னர் 1873-க்குப் பிறகு, நண்பகல் 12 மணிக்கு பதிலாக இரவு 8 மணிக்கு பீரங்கிகள் குண்டுகளை கக்கி பொது மக்களுக்கு நேரம் அறிவித்திருக்கின்றன. அதன்மூலம் 1950-ம் ஆண்டுக்குப் பின்பு பீரங்கி மூலம் குண்டு போட்ட பகுதி, `குண்டு போடும் தெரு' என்றே அழைக்கப்பட்டு வருகிறது. 1950-ம் ஆண்டு முதல் பீரங்கி வெடிக்கப்படுவது நிறுத்தப்பட்டதால், தற்போது மாநகராட்சி நிர்வாகம் அந்த பீரங்கியை பராமரித்து பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருக்கிறது.

மாநகராட்சி பராமரிப்பில் பீரங்கி

இதுகுறித்து குண்டு போடும் தெருவில் வசிப்பவர்களிடம் பேசினோம். ``எங்க ஏரியாவுக்கு வர யாராக இருந்தாலும் பயந்துக்கிட்டுதான் வருவாங்க. காரணம், வர வழியில எங்க ஏரியா போர்டே ஒரு மிரட்டல கொடுத்துடும். அதனால தேவை இல்லாத நபர்கள் எங்கப் பகுதிக்கு வர மாட்டாங்க, எங்க ஏரியா பெயரோ என்னவோ தெரியல திருட்டு பசங்க கூட வர்றதுக்கு யோசிப்பாங்க... அப்படி டெரரான ஏரியா இது. குண்டு போடு தெருனு இருக்குறதனால எல்லாரும் வெடிகுண்டு தயாரிக்கிறாங்களோனு நெனச்சிட்டு போரவங்க உண்டு. இங்க உள்ளவங்களுக்கே ஏன் இந்த பெயர் வந்துச்சினு தெரியாது. இப்போ எங்க ஏரியா வரலாற்றுல இடம் புடிச்சிடுச்சி. எங்க ஏரியா பெயர்தான் எங்கல கெத்தா எல்லாரையும் திரும்பி பார்க்க வைக்குது" என்றனர்.



from Latest News https://ift.tt/qQtOFCI

Post a Comment

0 Comments