``இது ஓரிரவில் நடந்ததில்லை" -சல்மான் கான் விமர்சனத்துக்கு யஷ் தெரிவித்த பதில்!

பேன் இந்தியா அளவில் வெளியாகும் படங்கள் விற்பனை ரீதியாக பெரிய அளவில் சாதிக்கின்றன. பாகுபலி தொடங்கி வைத்த இந்த ட்ரண்ட் சமீபத்தில் வெளியான 'புஷ்பா' படம் வரை ஒர்க் அவுட் ஆனது. இதனால் இந்தி நடிகர்கள் இங்கு நடிப்பதும் தென்னிந்திய நடிகர்கள் இந்தி சினிமாக்களில் பணியாற்றுவதும் என மார்க்கெட் விரிவடைந்து வருகிறது. அதே நேரத்தில் இரு பக்கமும் உரசலும் தொடர்கிறது. சமீபத்தில், ஒரு பிரஸ்மீட்டில் சல்மான் கான் ராம் சரணை வாழ்த்திவிட்டு ``தென்னிந்தியப் படங்கள் இங்கு ஹிட்டாகின்றன, இந்திப் படங்கள் அங்கு ஓடுவதில்லை" எனத் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதற்கு நடிகர் யஷ் சல்மானுக்கு பதில் தெரிவித்திருக்கிறார்

KGF

"இதனை அப்படி பார்க்க வேண்டியதில்லை. எங்களது படங்களும் தகுந்த வரவேற்பைப் பெறுவதில்லை. என்ன நடக்கிறதென்றால் இங்கு டப் செய்ய தொடங்கிவிடுகிறார்கள், நாங்கள் என்ன உருவாக்குகிறோமோ அதற்கு மக்கள் பழகிக் கொள்கிறார்கள். ஆரம்பத்தில் டப் படங்களை ஜோக்காக நினைத்து கொள்கிறார்கள். அந்த நிலைமை டப்பிங்கினால் தான் உருவாகிறது. முக்கிய இடம் கிடைப்பதில்லை. எங்களுடைய கதை சொல்லும் முறைக்கும் படத்திற்கும் முக்கியத்துவம் கிடைக்கிறதென்றால் அது ஓரிரவில் நடத்துவிடுவதில்லை. அவர்களுக்கு எங்களது பாணி கன்டென்ட்கள் சென்றுசேர்வதற்கு சில வருடங்கள் எடுக்கும். பாகுபலி படம் எங்களுக்கு முன்னோடியாக அந்த ஸ்பேஸை உருவாக்கி வைத்திருந்தது. அதன் பிறகு KGF உருவாக்கியது."

மேலும், "நாங்கள் நிறைய ஹிந்தி படங்கள் பார்க்கிறோம். ஹிந்தி நட்சத்திரங்களை ரசிக்கிறோம். ஆனால் மார்க்கெட் ரீதியாக சல்மான் சார் சொல்வது சரியே. இன்னும் அதிகரிக்கவேண்டும். படம் வெளியாவதில் உள்ள மற்ற கோணங்களையும் பார்க்க வேண்டும். நல்ல தயாரிப்பு நிறுவனங்கள் இங்கு வர வேண்டும், நல்ல பொழுதுபோக்கு படங்கள் வெளியாக இங்கிருக்கும் மக்களோடு இணைந்து பணியாற்ற வேண்டும். அது கூடிய விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கிறேன்" என்று பதில் அளித்திருக்கிறார்.

KGF இரண்டாவது பாகம் ஏப்ரல் 14 உலகம் முழுவதும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.



from Latest News https://ift.tt/93jKOWx

Post a Comment

0 Comments