``தமிழகத்தில் இடதுசாரி மாற்றை கொண்டு வருவோம்!" - மதுரையில் மாநாட்டில் கே.பாலகிருஷ்ணன் பேச்சு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது மாநில மாநாடு 3 நாள்கள் மதுரையில் நடந்தது. மாநாட்டின் நிறைவில் கட்சியின் மாநிலச் செயலாளராக கே.பாலகிருஷ்ணன் இரண்டாவது முறையாகத் தேர்வு செய்யப்பட்டார்.

கே.பாலகிருஷ்ணன்

மாநிலக்குழு உறுப்பினர்களாக 79 பேர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், மாநில செயற்குழு உறுப்பினர்களாக கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, பி.சம்பத், செல்வசிங், எம்.என்.எஸ்.வெங்கட்ராமன், எஸ்.நூர்முகம்மது, பி.சண்முகம், என்.குணசேகரன், கே.கனகராஜ், மதுக்கூர் ராமலிங்கம், சு.வெங்கடேசன், கே.பாலபாரதி , கே.சாமுவேல்ராஜ் , எஸ்.கண்ணன், ஜி.சுகுமாறன் என 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன், ``23- வது மாநில மாநாடு வெற்றிகரமாக நிறைவு பெற்றது. கடந்த காலப்பணிகள், எதிர்காலப்பணிகள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் பா.ஜ.க காலூன்றாத வகையில் தீவிரமாக பணியாற்ற மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது.

சீத்தாரம் யெச்சூரி

மாநாட்டில் 60 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கோயில்களில், திருவிழாக்களில் ஊடுருவும் பா.ஜ.க-வின் செயல் திட்டங்களை முறியடிக்க வியூகம் வகுத்து உள்ளோம்.

மக்களின் வாழ்வாதார பிரச்னைகளுக்கு தொடர்ந்து போராட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமைச்சர் ராஜகண்ணப்பன் செயல் கண்டிக்கத்தக்கது, அமைச்சர் பேச்சு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும். துறை மாற்றம் மட்டும் போதாது. சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோயில் விழாக்களை பயன்படுத்திக்கொள்ளும் ஆர்.எஸ்.எஸ்-ஸின் நடவடிக்கைகளை முறியடிக்கவே கோயில் நிர்வாகத்தில் தலையீடு செய்ய உள்ளதாகக் கூறினோம். இதை சிலர் தவறாக புரிந்துகொண்டார்கள். கோயில்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அபிஷேகம் ஆராதனை எல்லாம் செய்யமாட்டார்கள்.

பிரகாஷ்காரத் வாழ்த்து

பெட்ரோல் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தி எப்ரல் 4-ம் தேதி தமிழகத்தில் 500 இடங்களில் போராட்டம் நடத்தவும், நீர் நிலை புறம்போக்கு, கோயில் நிலங்களில் குடியிருக்கும் மக்களை தமிழக அரசு அப்புறப்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி மே 6-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தப்படும்.

தற்போதைய கூட்டணி தொடரும், கூட்டணிக்கு புதிதாக யார் வந்தாலும் நல்லதுதான், இடதுசாரி அமைப்புகளை பலப்படுத்த கேரளா போல் இடதுசாரி ஜனநாயக முன்னணி உருவாக்கப்பட்டது. இடதுசாரி மாற்றை தமிழகத்தில் கொண்டு வருவோம். பா.ஜ.க-வுக்கு எதிரான அணியில் அனைத்துக் கட்சிகளும் இருக்கும்" என்றார்.



from Latest News https://ift.tt/GumRMNl

Post a Comment

0 Comments