``அதிமுக ஆட்சியிலே அனுமதி கேட்டனர்..” - சட்டமன்றத்தில் எதிரொலித்த சேலம் சொளடேஸ்வரி கல்லூரி விவகாரம்

சேலத்தில் இயங்கிவரும் சொளடேஸ்வரி கல்லூரியை மகளிர் கல்லூரியாக மாற்றக்கூடாது என மாணவ அமைப்புகளும், ஓய்வு பெற்ற பேராசிரியர் சங்கங்களும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக அரசு பிறப்பித்துள்ள ஆணையினை உடனே ரத்து செய்ய வேண்டுமென்று மாவட்ட ஆட்சியரிடமும், பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரிடமும் மனு அளித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழக சட்டசபை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அதிமுக., சேலம் தெற்கு மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்ரமணியம் சில கேள்விகளை முன்வைத்தார். ``சேலம் மாநகரில் இயங்கிவரும் பிரபல சொளடேஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியை, தீடீரென மகளிர் கல்லூரியாக மாற்றியதற்கான காரணம் என்ன? ஏற்கனவே சேலம் மாநகரில் 4 மகளிர் கல்லூரிகள் இயங்கிவரும் நிலையில், 5 வது கல்லூரியாக இக்கல்லூரியும் மாற்றவது மாணவர்களுக்கு பெரும் சிரமத்தை உண்டாக்க கூடியதாகும். எனவே, இதனை உரிய பரிசீலனையின் பேரில், மகளிர் கல்லூரியாக மாற்றவேண்டும் என்ற அரசு ஆணையை ரத்து செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

அமைச்சர் பொன்முடி

இதற்கு பதிலளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ``சேலம் சொளடேஸ்வரி கல்லூரி என்பது ஆரம்ப காலக்கட்டங்களில் ஆண்கள் கல்லூரியாக செயல்பட்டு வந்ததை அதிமுக., ஆட்சியில் தான் இருபாலர் கல்லூரியாக மாற்றப்பட்டது.

கடந்த அதிமுக ஆட்சி இருக்கும்போதே, 2 வருடமாக இக்கல்லூரி மகளிர் கல்லூரியாக மாற்ற அரசு அனுமதி கேட்டுவந்தனர். இந்நிலையில் பெண்கள் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை கொடுத்து திட்டங்களை வழிவகுத்துக் கொண்டிருக்கும் தற்போதைய தி.மு.க.,அ ரசு சொளடேஸ்வரி கல்லூரியை மகளிர் கல்லூரியாக செயல்படுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. எனினும் மாணவர்களின் கல்வி பாதிக்காத வண்ணம் சேலம் மாநகரில் படிப்பதற்கு கல்லூரி இருக்கிறதா என்று பரிசீலனை செய்யப்படும்” என்றார்.



from Latest News https://ift.tt/q1yx90Y

Post a Comment

0 Comments