`மோடி அரசால் மனமுடைந்த 800 பாகிஸ்தானிய இந்துக்கள்; பாஜக அரசுக்கு இது அவமானம்’ - சுப்பிரமணியன் சுவாமி

இந்தியாவிலுள்ள பாகிஸ்தானிய சிறுபான்மையினரின் உரிமைகளுக்காகப் பணியாற்றும், சீமந்த் லோக் சங்கதன் எனும் அமைப்பு, இந்தியா வந்தடைந்த 800 பாகிஸ்தானிய இந்துக்கள் மீண்டும் பாகிஸ்தானுக்கே திரும்பிச்சென்றதாக நேற்று கூறியிருந்தது. மேலும், இந்தியாவில் குடியுரிமை பெறலாம் என்று இந்தியாவுக்கு வந்த இவர்களுக்கு, இந்திய குடியுரிமைச் சட்டத்தின்படி(சிஏஏ) மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததால், அவர்கள் பாகிஸ்தானுக்கு திரும்பிச்சென்றதாக சீமந்த் லோக் சங்கதன் கூறியிருந்தது.

இந்த நிலையில், மத்திய அரசின்இந்த நடவடிக்கை, பாஜகவுக்கு அவமானம் என, பா.ஜ.க எம்.பி சுப்பிரமணியன் சுவாமி ட்வீட் செய்துள்ளார்.

அந்த ட்வீட்டில், ``பாகிஸ்தான் அரசின் மனித உரிமை மீறல் காரணமாக, இந்திய குடிமக்கள் ஆகிவிடலாம் என்ற நம்பிக்கையுடன், இந்தியா வந்தடைந்த 800 பாகிஸ்தானிய இந்துக்கள் மீது, மோடி அரசு சிஏஏ சட்டம் நடவடிக்கை எடுக்காததால், அவர்கள் மனமுடைந்து மீண்டும் பாகிஸ்தானுக்கே சென்றுள்ளனர். இது நமது பா.ஜ.க அரசுக்கே அவமானம்" என சுப்ரமணியன் சுவாமி பதிவிட்டிருந்தார்.



from Latest News https://ift.tt/JvZomQ6

Post a Comment

0 Comments