டெல்லியில் வீட்டுக்கே சென்று ரேஷன் விநியோகிக்கும் திட்டம் ரத்து - உயர் நீதிமன்றம்

டெல்லியில் ஆட்சி அமைத்துள்ள ஆம் ஆத்மி கட்சி, தேர்தல் வாக்குறுதியாக ரேஷன் பொருள்கள் நேரடியாக வீட்டுக்கே வந்து விநியோகிக்கும் திட்டத்தை அறிவித்திருந்தது. ஆனால் இந்த திட்டத்தை எதிர்த்து ரேஷன் டீலர்கள் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அரவிந்த் கெஜ்ரிவால்

அந்த இரண்டு மனுக்களையும் டெல்லி உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. அதைத் தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த தற்காலிக தலைமை நீதிபதி விபின் சங்கி மற்றும் நீதிபதி ஜஸ்மீத் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, மாநில அரசு தனியாக வழங்கும் ரேஷன் திட்டத்தை வேண்டுமானால் வீட்டுக்கு வீடு கொண்டு போய் கொடுக்கலாம். ஆனால் மத்திய அரசு வழங்கும் ரேஷன் தானியங்களை வழங்க இந்த திட்டத்தைப் பயன்படுத்த முடியாது எனக் கூறி இந்தத் திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.



from Latest News https://ift.tt/maycwY8

Post a Comment

0 Comments