அலங்காரச் செடி நாற்றுகள், பழ நாற்றுகள்; அதிகரிக்கும் திசு வளர்ப்பு தாவரங்களின் ஏற்றுமதி!

வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமான அபீடா, திசு வளர்ப்பு தாவரங்களினுடைய ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில், 'இலை, உயிருள்ள தாவரங்கள், வெட்டப்பட்ட மலர்கள் மற்றும் நடவுப் பொருள்கள் போன்ற திசு வளர்ப்புத் தாவரங்களின் ஏற்றுமதியை ஊக்குவித்தல்' என்ற தலைப்பில் இணைய வழி கருத்தரங்கு ஒன்றை நடத்தியது.

முதல் முறையாக திசு வளர்ப்பு ஆய்வகங்களோடு நடைபெறும் இந்த கருத்தரங்கில், பல நாடுகளில் உள்ள திசு வளர்ப்பு அமைப்புக்கான சமீபகால தேவைகள் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு அமைப்புகளை இந்திய ஏற்றுமதியாளர்கள் எவ்வாறு அணுகுவது என அபீடா அதிகாரிகள் விளக்கினர். அதனை தொடர்ந்து, திசு வளர்ப்பு தாவரங்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் தாவரம் மற்றும் பயிர்களுக்கான நுண்ணுயிர்களின் பட்டியலை அளிக்குமாறு ஏற்றுமதியாளர்களை அபீடா கேட்டுக் கொண்டுள்ளது.

திசு வளர்ப்பு ஆய்வகம்

ஏற்றுமதியாளர்கள் இந்தியாவில் கிடைக்கும் வளர்ப்புத் தாவரங்கள், வனத் தாவரங்கள், தொட்டிச் செடிகள், அலங்காரச் செடி நாற்றுகள், பழ நாற்றுகள் மற்றும் நடவு செய்வதற்கான பொருட்கள் போன்றவற்றை காட்சிப்படுத்த ஒரு சர்வதேச கண்காட்சியை ஏற்பாடு செய்ய வேண்டுமென இந்தியாவிடம் பரிந்துரைத்தனர். இந்த கருத்தரங்கில் திசு வளர்ப்பு குறித்த சிக்கல்கள், அதனை நிவர்த்தி செய்யும் வழிமுறைகளும் விவாதிக்கப்பட்டது.

இந்தியாவின் திசு வளர்ப்பு தாவரங்களை இறக்குமதி செய்யும் முதல் பத்து நாடுகள் நெதர்லாந்து, அமெரிக்கா, இத்தாலி, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், கென்யா, செனகல், எத்தியோப்பியா மற்றும் நேபாளம். திசு வளர்ப்பு ஆலைகளின் ஏற்றுமதி 2020 -21ம் ஆண்டுகளில் சுமார் 17.17 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. நெதர்லாந்துக்கு மட்டும் 50% ஏற்றுமதியை இந்தியா செய்து வருவது குறிப்பிடத்தக்கது.



from Latest News https://ift.tt/wJPgEV5

Post a Comment

0 Comments