காஷ்மீர் மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் இடங்கள்; பணம் தீவிரவாதத்துக்கு?! - ஹுரியத் தலைவர் மீது புகார்

ஶ்ரீ நகரில் என்.ஐ.ஏ சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம், யுஏபிஏ(உபா), ஐபிசி-யின் கீழ் ஹுரியத் அமைப்பின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. ``பாகிஸ்தானில் உள்ள கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிற படிப்புகளில் ஜம்மு-காஷ்மீரில் வசிப்பவர்களை அனுமதிப்பதற்காக சில கல்வி ஆலோசகர்களுடன் இணைந்து ஹுரியத் தலைவர் மற்றும் சிலர் பணியாற்றியதாகத் தெரிகிறது.

மேலும், மாணவர்களைக் கல்லூரியில் சேர்க்க மாணவர்களின் பெற்றோரிடமிருந்து எம்பிபிஎஸ் இடங்களை ஹுரியத் தலைவர்கள் ரூ.15 முதல் ரூ.20 லட்சத்துக்கு விற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ராணுவம்

மேலும், அந்த பணத்தை ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஆதரிப்பதற்காகச் செலவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான விசாரணையின் போது, ​​குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் வீடுகளிலும், மற்ற இடங்களிலும் சிறப்புப் புலனாய்வு அமைப்பு (எஸ்.ஐ.ஏ) சோதனை மேற்கொண்டது.

அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பிற பொருள்களை பகுப்பாய்வு செய்யப்பட்டதில், குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் கணக்கில் பாகிஸ்தானில் எம்பிபிஎஸ் உள்பட பல்வேறு தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை படிப்புகளில் சேர்க்கை வழங்கியதன் மூலம் பெறப்பட்ட பணம் டெபாசிட் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஜம்மு கஷ்மீர்

மேலும், இது தொடர்பான விசாரணை சாட்சியங்கள், வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. சேகரிக்கப்பட்ட பிற ஆதாரங்களின் அடிப்படையில், பாகிஸ்தானில் எம்பிபிஎஸ் மற்றும் பிற தொழில்முறை படிப்புகளில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் நெருங்கிய குடும்ப உறவினர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.

மேலும், மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட தொகை கல் வீசுபவர்கள் மற்றும் சட்டவிரோத மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் விசாரணையின் போது வெளிவந்துள்ளன" எனக் குறிப்பிட்டுள்ளது.

நீதிமன்றம்

இந்த ஹூரியத் அமைப்பு என்பது ஒரு ஐக்கிய அரசியல் முன்னணியாக 26 அரசியல், சமூக மற்றும் மத அமைப்புகளின் கூட்டணி என்பது குறிப்பிடதக்கது.



from Latest News https://ift.tt/ymeZXxo

Post a Comment

0 Comments