Doctor Vikatan: எடையைக் குறைக்க உதவுமா இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்?

என் வயது 45. கடந்த 10 வருடங்களாக எனக்கு ரத்த அழுத்தம் இருக்கிறது. அதற்கான மருந்துகளை தினமும் இரவில் எடுத்து வருகிறேன். என் எடை 110 கிலோ. நான் இன்ட்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் முறையில் எடையைக் குறைக்க முயலலாமா?

- அல்ஃபோன்ஸ் கைசர் (விகடன் இணையத்திலிருந்து)

லேகா ஸ்ரீதரன்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்.

``இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் என்பது விரதத்துக்கும் உண்ணும் காலத்துக்குமிடையிலான சுழற்சி முறை. கலோரிகளில் கவனமாக, கட்டுப்பாட்டுடன் இருப்பது, போதுமான அளவு புரதச்சத்து எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி ஆகியவை சரியாகப் பின்பற்றப்பட்டால் இந்த முறை நல்ல பலன் தரும். இரண்டு மணி நேரத்துக்கொரு முறை சாப்பிடும் பழக்கமுள்ளவர்கள் இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் முறையைப் பின்பற்றுவதன் மூலம் அந்தப் பழக்கத்திலிருந்து வெளியே வர முடியும்.

ஆனால், இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்ட்டிங் என்றில்லை, எந்த டயட் முறையையும் மருத்துவர் மற்றும் டயட்டீஷியனின் ஆலோசனை இல்லாமல் பின்பற்றக்கூடாது. அதிலும் குறிப்பாக ஏதேனும் உடல்நல பாதிப்பு உள்ளவர்களும், மருந்துகள் எடுத்துக்கொள்வோரும் குறிப்பிட்ட அந்த டயட்டின் சாதக, பாதகங்கள் குறித்து மருத்துவர் மற்றும் டயட்டீஷியனிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.

இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்கை பின்பற்றுவோர் வருடம் இருமுறை டெக்ஸா ஸ்கேன் செய்து பார்த்து, உடல் அமைப்பை கவனிக்க வேண்டியது அவசியம்.

Fasting

நீங்கள் குறிப்பிட்டுள்ள ரத்த அழுத்த பாதிப்பு, அதற்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகள் பற்றி மருத்துவரிடம் பேசி, எடையைக் குறைப்பதற்கு சரியான வழி என்ன என ஆலோசனை பெறுவதே சிறந்தது. நீங்களாக எதையும் பின்பற்ற வேண்டாம்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?


from Latest News https://ift.tt/YdJtv8o

Post a Comment

0 Comments