வயது 36. பிரசவத்துக்குப் பிறகு உடல் பருத்துவிட்டது. நான் காப்பர்டி பொருத்திக்கொண்டுள்ளேன். இந்நிலையில் நான் உடற்பயிற்சிகள் செய்யலாமா? கடினமான உடற்பயிற்சிகளால் காப்பர் டியின் பொசிஷன் மாற வாய்ப்புண்டா? காப்பர் டி சரியான பொசிஷனில்தான் இருக்கிறதா என்பதை எப்படி உறுதிப்படுத்துவது?
- மல்லிகா (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் விஜயா கணேஷ்.
``பிரசவத்துக்குப் பிறகு பெண்களுக்கு உடல் எடை அதிகரிப்பது சகஜமாகப் பலரும் சந்திக்கிற பிரச்னைதான். சிசேரியன் பிரசவம் என்றால் மூன்று மாதங்களுக்குப் பிறகும், சுகப்பிரசவம் என்றால் 45 நாள்களுக்குப் பிறகும் மெள்ள மெள்ள உடற்பயிற்சிகளை ஆரம்பித்துச் செய்யத் தொடங்கி, எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காப்பர் டி பொருத்திக் கொண்டவர்களும் தாராளமாக உடற்பயிற்சிகள் செய்யலாம்.
கடினமான உடற்பயிற்சிகள் செய்யும்போது காப்பர்டியின் பொசிஷன் மாறிவிடுமோ என்ற உங்கள் பயம் தேவையற்றது. ஒருவேளை உங்களுக்கு அப்படிச் சந்தேகம் வந்தால் மகப்பேறு மருத்துவரை அணுகலாம். அவர் உங்களைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு ஸ்கேன் செய்து அதில் காப்பர் டியின் பொசிஷன் சரியாக இருக்கிறதா என்று உறுதிபடுத்துவார்.
பொதுவாகவே காப்பர் டி பொருத்திக்கொண்டவர்கள் அதைப் பொருத்திக்கொண்ட அடுத்த மாதம், பிறகு 3 மாதங்களில் ஒருமுறை, 6 மாதங்களில் ஒருமுறை, வருடம் ஒருமுறை அது சரியான பொசிஷனில் இருக்கிறதா என்பதை சரிபார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்."
உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
from Latest News https://ift.tt/kVZdhcO
0 Comments