என் வயது 40. ஆறு மாதங்களுக்கு முன்பு அப்பெண்டிசைட்டிஸ் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். அறுவை சிகிச்சை செய்ததும் பீரியட்ஸின்போது என் வலப்பக்க அடிவயிற்றில் ஒருவித வலி இருந்தது. அறுவை சிகிச்சை முடிந்து ஆறு மாதங்களாகியும் பீரியட்ஸுக்கு முன்னால் அந்த வலி இருக்கிறது. என்ன பிரச்னையாக இருக்கும்?
- சிவாகுமாரி (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குடல், இரைப்பை அறுவைசிகிச்சை மருத்துவர் ஸ்ரீவத்சன் குருமூர்த்தி.
``உங்களுக்குச் செய்யப்பட்டதாக நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அப்பெண்டிசைட்டிஸ் அறுவை சிகிச்சை வயிற்றைத் திறந்து ஓப்பன் சர்ஜரி முறையில் செய்யப்பட்டதா அல்லது லேப்ராஸ்கோப்பி முறையில் செய்யப்பட்டதா என்ற தகவல் முதலில் தெரியவேண்டும். லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை முறையில் அந்தப் பகுதியில் பிசிறுகள் ஒட்டிக்கொண்டிருக்கவோ, வலி இருப்பதோ மிக மிகக் குறைவாகவே இருக்கும். அதனால்தான் உங்களுக்கு எந்த முறையில் ஆபரேஷன் செய்யப்பட்டது என்ற தகவல் தெரிய வேண்டும்.
உங்களுக்கு அடிவயிற்றில் இருப்பதாகச் சொல்லப்படும் வலிக்கு சில காரணங்கள் இருக்கலாம். பெருங்குடல் பகுதியில் ஏற்பட்ட இன்ஃபெக்ஷன் (Colitis) ஒரு காரணமாக இருக்கலாம். அடுத்ததாக பெண்களுக்கு கர்ப்பப்பை மற்றும் சினைப்பைகளுக்கு இடையில் சேர்ந்துள்ள நீர் காரணமாகவோ, இன்ஃபெக்ஷன் காரணமாகவோ கூட இப்படி வலி வரலாம்.
இதை Pelvic Inflammatory Disease (PID) என்று சொல்வோம். ஒருவேளை இந்த வலி பீரியட்ஸுக்கு முன்னால் வரக்கூடிய Dysmenorrhea என்ற பிரச்னையின் காரணமாகவும் இருக்கலாம்.
எனவே உங்கள் விஷயத்தில் வலிக்கான காரணத்தை அறிய அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் மற்றும் சிறுநீர்ப் பரிசோதனை செய்யப்பட வேண்டும். சிறுநீர்த்தொற்று இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும். அல்ட்ரா சவுண்டு ஸ்கேனில் ஆபரேஷன் செய்யப்பட்ட இடம் எப்படியிருக்கிறது என்றும், கர்ப்பப்பை மற்றும் சினைப்பையின் இடையில் நீர் கோத்துள்ளதா என்றும் தெரியும்.
குடல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் எதுவும் இல்லை என்பது உறுதியானால், மகப்பேறு மருத்துவரை அணுகி கர்ப்பப்பை மற்றும் சினைப்பை சம்பந்தப்பட்ட வலிக்கு சிகிச்சைகள் எடுத்துக்கொள்ளலாம்."
உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
from Latest News https://ift.tt/qQ2ab95
0 Comments