கருக்கலைப்பு உரிமை:``நீதிமன்றத் தீர்ப்பு அமெரிக்காவைப் பின்னோக்கிக் கொண்டு சென்றுவிட்டது" - ஜோ பைடன்

அமெரிக்காவில் 1973-ம் ஆண்டில் ரோ Vs வேட் (Roe Vs Wade) வழக்கில், ஒரு பெண்ணின் கருக்கலைப்புக்கான அரசியலமைப்பு உரிமையை அங்கீகரித்து, அதை நாடு முழுவதும் சட்டபூர்வமாக்கியது நீதிமன்றம். இந்த நிலையில், `கருக்கலைப்பு நடைமுறையைக் கட்டுப்படுத்த அல்லது தடை செய்ய வேண்டும்’ என அமெரிக்கக் குடியரசுக் கட்சியினரும், சில அமைப்புகளும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அதைத் தொடர்ந்து, 15 வாரங்களுக்குப் பிறகு `கருக்கலைப்பு செய்ய விரும்பும் பெண்களுக்கு அரசியலமைப்பு வழங்கும் சட்டப் பாதுகாப்பை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்’ என்ற அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம், ரோ Vs வேட் வழக்கை ரத்துசெய்து உத்தரவிட்டது. அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சித்திருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக அவர் தனது உரையில்," நீதிமன்றம் இதுவரை செய்யாத பிழையைச் செய்திருக்கிறது.

அமெரிக்கா

பல அமெரிக்கர்களுக்கு மிகவும் அடிப்படையான ஓர் அரசியலமைப்பு உரிமையை வெளிப்படையாகப் பறித்துவிட்டது. எனது பார்வையில் உச்ச நீதிமன்றத்தை வருத்தமடையவைக்கும் பிழை. இந்தத் தீர்ப்பு நாட்டை 150 ஆண்டுகள் பின்னோக்கிக் கொண்டு செல்கிறது. அமெரிக்க மாகாணங்களில் ஒரு பெண்ணின் உரிமைகளைப் பாதுகாக்கத் தன்னால் முடிந்த அனைத்தையும் உறுதியாகச் செய்வேன்.

நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு ஒரு தீவிரமான மற்றும் ஆபத்தான பாதை. இந்தத் தீர்ப்புக்கு எதிராகப் போராடும் போராட்டக்காரர்கள் சற்று அமைதி காக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். அதேநேரம், கருக்கலைப்பு தீர்ப்பு கருத்தடை மற்றும் ஓரினச்சேர்க்கை திருமண உரிமைகளை குறை மதிப்புக்கு உட்படுத்தும் என்பதையும் எச்சரிக்கிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.



from Latest News https://ift.tt/WIALbaM

Post a Comment

0 Comments