சென்னை உட்பட இந்தியா முழுவதும் மெட்ரோ இரயில்கள் இயங்கி வருகின்றன. இது பெரும்பாலும் நிலத்தின் அடியிலும் உயரமான பாலங்களிலும் இயங்கி வருகின்றன. இந்நிலையில் தலைகீழாக மேலே இருப்புப் பாதைக் கொண்ட 'Skybus' என்று அழைக்கப்படும் மணிக்கு 100km/h வேகத்தில் இயங்கும் மெட்ரோ ரயில் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. இது இந்தியாவின் தலைநகர் மற்றும் முக்கிய நகரங்களில் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து முதல்முறையாக இந்தியாவில் நதிக்கு அடியில் சுமார் ரூ. 8,600 கோடி செலவில் 'Underwater Metro Line' மெட்ரோ இரயில் பாதை அமைக்கப்படவுள்ளது. இந்த மெட்ரோ ரயில் பாதை கொல்கத்தாவில் உள்ள ஹூக்ளி (Hooghly River) நதிக்கு 13 மீட்டருக்குக் கீழே 500 மீட்டர் தொலைவுக்கு இரட்டை சுரங்கப்பாதையுடன் அமைக்கப்படும் என்று கொல்கத்தா மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (KMRC) நிர்வாகம் அறிவித்திருந்தது. தற்போது இதற்கானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை 2023-ம் ஆண்டு முதல் மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
from Latest News https://ift.tt/GC6bkF0
0 Comments