`ஒருவேளை யஷ்வந்த் சின்ஹா வெற்றி பெற்றால்...’ நீட் தேர்வு விலக்கு கேள்விக்கு கனிமொழியின் பதில் என்ன?

குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. ஆளும் பா.ஜ.க கூட்டணி சார்பாகத் திரௌபதி முர்மு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அதேபோல, பா.ஜ.க-வை எதிர்க்கும் காங்கிரஸ், தி.மு.க, திரிணாமூல் காங்கிரஸ், கம்னியூஸ்ட் கட்சிகள் சார்பாக யஷ்வந்த் சின்ஹா பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

யஷ்வந்த் சின்ஹா, திரௌபதி முர்மு

அதன்படி, தங்களுக்கான ஆதரவைத் திரட்டுவதில் இருவரும் தீவிரமாக இறங்கியுள்ளனர். மறுபுறம் அரசியல் கட்சிகளும், தங்களின் ஆதரவு யாருக்கு என்று அறிவித்து வருகின்றனர்.

இதில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இல்லாத ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும், மாயாவதியும் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பா.ஜ.க கூட்டணியில் இல்லாத மாநிலக் கட்சிகளில் ஆதரவைப் பெற யஷ்வந்த் சின்ஹா மாநிலம் வாரியாக தலைவர்களைச் சந்தித்து தனக்கான ஆதரவைத் திரட்டி வருகிறார்.

யஷ்வந்த் சின்ஹா

இந்நிலையில், யஷ்வந்த் சின்ஹா தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினைச் சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார். இந்த கூட்டத்தில், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் சார்பாக எம்.எல்.ஏ செல்வ பெருந்தகை, வி.சி.க சார்பாக சிந்தனை செல்வன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோரும் பங்கேற்று, தங்களை ஆதரவை யஷ்வந்த் சின்ஹா-வுக்கு தெரிவித்தனர்.

கனிமொழி

இதனையடுத்து, யஷ்வந்த் சின்ஹா, தி.மு.க எம்.பிக்கள், கனிமொழி, திருச்சி சிவா ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, ``ஒருவேளை யஷ்வந்த் சின்ஹா வெற்றி பெற்றால், நீட் தேர்வு விலக்கு தொடர்பான மசோதாவில் கையெழுத்துப் போடச் சொல்வீர்களா? இதுகுறித்து அவரிடம் பேசியிருக்கிறீர்களா? என்று கேட்டபோது, ``வெற்றி பெற்றால் பாத்துகலாம்" என்று கனிமொழி முடித்துக் கொண்டார்.



from Latest News https://ift.tt/XtdpYOx

Post a Comment

0 Comments