`ஊட்டியில் பல இடங்களில் வெடிகுண்டு' - கலெக்டருக்கு இரவில் வந்த மிரட்டல்?; விடிய விடிய நடந்த சோதனை

சுற்றுலா நகரான ஊட்டியில் நேற்று இரவு வழக்கத்துக்கு மாறாக போலீஸார் குவிக்கப்பட்டு வாகன சோதனை மற்றும் தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது. நகருக்குள் நடமாடிய நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதுடன் வாகனங்களை சல்லடை போட்டு சலித்துக் கொண்டிருந்தனர்.

வெடிகுண்டு மிரட்டல்

இந்த திடீர் அதிரடி சோதனைக்கான காரணம் குறித்து காவல்துறையினரிடம் கேட்டோம், " நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித்திற்கு நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். ஊட்டி நகருக்குள் பல இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும் நள்ளிரவு 12 மணிக்கு வெடிக்க இருப்பதாகவும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கிறார். மாவட்ட நிர்வாகம் அளித்த தகவலின் அடிப்படையில் பல இடங்களில் விடிய விடிய தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம். மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஊட்டி மலை ரயில் நிலையம் ஆகிய முக்கிய இடங்களில் வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனை மேற்கொண்டு வருகிறோம். ஆட்சியருக்கு வந்த மர்ம போன் கால் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றனர்.

இந்த விவகாரம் குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஐ.ஏ.எஸ், " சில விவரங்களை வெளியில் சொல்ல முடியாது. மாவட்டத்தின் பாதுகாப்பு கருதி வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது" என தெரிவித்திருக்கிறார்.

வெடிகுண்டு மிரட்டல்

ராணுவ பயிற்சி மையங்கள், வெடி மருந்து தொழிற்சாலை, ஆளுநர் மாளிகை, அணைக்கட்டுகள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாவட்டத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



from Latest News https://ift.tt/IQiHWAV

Post a Comment

0 Comments