எடப்பாடி பழனிசாமி கடிதத்தை ஏற்றுக்கொண்ட வங்கிகள் - திண்டுக்கல் சீனிவாசன் வசம் வங்கிக் கணக்குகள்

அதிமுக பொதுக்குழுவால், கட்சியின் பொருளாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி தரப்பினரால் நீக்கப்பட்ட பிறகும், கட்சியின் வங்கிக் கணக்கு விவகாரங்களை யாரிடமும் ஒப்படைக்கக் கூடாது என கரூர் வைஸ்யா வங்கிக்கு கடிதம் அனுப்பியிருந்தார். மேலும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அதிமுக இப்போதும் தன்னிடம் தான் இருப்பதாக, தேர்தல் ஆணையத்துக்கும் ஓ.பி.எஸ் கடிதம் எழுதியிருந்தார்.

இது ஒருபுறம் நடந்துகொண்டே இருக்க, கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க-வின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனை நியமித்தார்.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில், அ.தி.மு.க-வின் வங்கிக் கணக்கு விவகாரங்களைக் கையாளும் பொறுப்பும், அ.தி.மு.க-வின் பொருளாளர் என்ற முறையில் திண்டுக்கல் சீனிவாசன் வசம் சென்றிருக்கிறது. இதுதொடர்பாக, வங்கிகளுக்கு எடப்பாடி பழனிசாமி எழுதியிருந்த அதிகாரப்பூர்வ கடிதத்தையும் வங்கிகள் ஏற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி

இதுகுறித்து வங்கிகளும், `எடப்பாடி பழனிசாமியிடமிருந்து ஆதாரங்களுடன் கூடிய கடிதம் பெறப்பட்டுள்ளது. ஆனால், ஓ.பி.எஸ் தரப்பிலிருந்து கடிதம் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஓ.பி.எஸ் தரப்பின் போதிய ஆதாரமின்மையால் வங்கிக் கணக்குகளைக் கையாள, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது' என்று கூறியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அ.தி.மு.க-வின் வங்கிக் கணக்குகள் யாவும், பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் கரூர் வைஸ்யா வங்கியில் இருக்கிறதென்பது குறிப்பிடத்தக்கது.



from Latest News https://ift.tt/0vAZnsM

Post a Comment

0 Comments