நடிகர் சல்மான்கானுக்கு கடந்த மாதம் 5-ம் தேதி கொலை மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது. அவரின் தந்தை சலீம் கான் மும்பையில் தனது வீட்டிற்கு அருகில் கடற்கரையோரம் நடைபயிற்சி சென்ற போது அவர் வழக்கமாக அமரும் இடத்தில் இந்த கொலை மிரட்டல் கடிதம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இக்கடிதத்தை பஞ்சாப் பாடகர் சிது மூஸ்வாலாவை கொலை செய்த லாரன்ஸ் பிஸ்னோய் தனது ஆட்கள் மூலம் அனுப்பியது மும்பை போலீஸாரின் தீவிர விசாரணையில் தெரிய வந்தது. லாரன்ஸ் இப்போது சிறையில் இருந்தாலும் அவனது ஆட்கள் வெளியில் அவன் சொல்லும் வேலைகளை செய்து வருகின்றனர். பிஸ்னோய் கூட்டாளி விக்ரம் பராட் இக்கொலை மிரட்டல் கடிதத்தை பிஸ்னோய் சார்பாக அனுப்பியது தெரிய வந்தது. இதையடுத்து நடிகர் சல்மான் கானுக்கு போலீஸார் பாதுகாப்பை பலப்படுத்தி இருக்கின்றனர்.
ஆனாலும் தனக்கு துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு சல்மான் கான் விண்ணப்பித்திருக்கிறார். சல்மான் கான் நேற்று மாலையில் மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேரில் சென்று இது தொடர்பான விண்ணப்பத்தை கொடுத்தார். மும்பை போலீஸ் கமிஷனர் விவேக் பன்சல்கரை சந்தித்து இதற்கான மனுவை கொடுத்தார். சல்மான் கானுக்கு மும்பைக்கு வெளியில் பன்வெல் என்ற இடத்தில் ஊருக்கு வெளியில் பண்ணை வீடு இருக்கிறது. அடிக்கடி அங்கு சென்று சல்மான் கான் தங்குவது வழக்கம். அது போன்ற சூழ்நிலையில் தனது பாதுகாப்புக்கு ஆயுதம் தேவை என்பதையும் சல்மான் கான் தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். மும்பையில் பெரும்பாலான பாலிவுட் நட்சத்திரங்கள் தங்களது பாதுகாப்புக்கு லைசென்ஸ் பெற்று துப்பாக்கி வாங்கி வைத்திருக்கின்றனர். ஆனால் சல்மான் கானுக்கு ஆயுதம் தாங்கிய பாதுகாவலர்கள் பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து அவர்களை தனது பாதுகாப்புக்கு சல்மான் கான் நியமித்திருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.
from Latest News https://ift.tt/cEtnIwz
0 Comments