``என்னைப் பொறுத்தவரை அவர் பாஜக தலைவரல்ல..." - ஜே.பி நட்டாவுடனான சந்திப்புக்கு பிறகு ஆனந்த் ஷர்மா

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் ஜி-23 காங்கிரஸ் தலைவர்களின் குழுவின் முக்கிய உறுப்பினர் ஆனந்த் ஷர்மா. இவர், காங்கிரஸ் கட்சித் தலைமையிடம் பலமுறை பகிரங்கமாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வருபவர். இந்த நிலையில், நேற்று மாலை ஆனந்த் ஷர்மா பா.ஜ.க தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்தார். அதைத் தொடர்ந்து ஆனந்த் ஷர்மா பா.ஜ.க-வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா இந்த தகவலை மறுத்துள்ளார்.

ஆனந்த் ஷர்மா

இது தொடர்பாக அவர் கூறியதாவது, "பா.ஜ.க தலைவர் ஜே.பி நட்டாவை நான் சந்திக்க எனக்கு முழு உரிமையும் உள்ளது. என்னைப் பொறுத்தவரை அவர் பா.ஜ.க தலைவர் அல்ல. நாங்கள் இருவரும் ஒரே மாநிலத்தில் இருந்து வருகிறோம். எங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்கிறோம். இதில் எந்த அரசியல் முக்கியத்துவமும் இல்லை.

பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா

நான் அவரைச் சந்திக்க வேண்டும் என்றால், நான் வெளிப்படையாகச் செல்வேன். இது பெரிய விஷயமா என்ன? நான் காங்கிரஸை சேர்ந்தவன். அவர் பா.ஜ.க அவ்வளவு தான். எனக்கும் அவருக்கும் கருத்தியல் வேறுபாடு இருப்பதால், எங்களுக்குள் தனிப்பட்ட பிளவு இருப்பதாக அர்த்தமில்லை. கருத்தியல் எதிர்ப்பாளர்களை நாங்கள் சமூக விரோதிகளாக கருத மாட்டோம்” என்று விளக்கமளித்துள்ளார்.



from Latest News https://ift.tt/upMobEZ

Post a Comment

0 Comments