திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா, லீனா மணிமேகலை இயக்கிய காளி திரைப்படத்தின் போஸ்டர் தொடர்பாகக் கருத்து தெரிவித்திருந்தது பெரும் சர்ச்சையானது. மேலும், திரிணாமுல் காங்கிரஸ்,"மஹுவா மொய்த்ராவின் கருத்துக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த சமந்தமும் இல்லை" என அறிவித்தது. ஆனால், காங்கிரஸ் எம்.பி சசி தரூர் உள்ளிட்ட சிலர் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், மஹுவா-வின் கருத்துக்கு அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும் என பா.ஜ.க தரப்பு போராட்டம் நடத்தியது. அதைத் தொடர்ந்து, நேற்று மஹுவா மொய்த்ரா, ``காளி வழிபாட்டாளரான நான், உங்கள் அறிவிலிகள், குண்டர்கள், போலீஸ் மற்றும் உங்கள் ட்ரோல்கள் என எதற்கும் பயப்படமாட்டேன். உண்மைக்குப் பின்வாங்கும் படைகள் எனக்கு தேவையில்லை" எனக் குறிப்பிட்டார்.
மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில், ``என் மீது பா.ஜ.க விரும்பினால் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யட்டும். இந்து மதத்தின் மீது பா.ஜ.க-வின் ஒற்றை ஆணாதிக்க பிராமண பார்வை மேலோங்கும், மற்ற மதத்தையும் சுற்றி வளைக்கும் இந்தியாவில் நான் வாழ விரும்பவில்லை. எனவே, நான் இறக்கும் வரை இது போன்று நடக்காமல் பாதுகாப்பேன். அதற்காக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யுங்கள் - நாட்டில் உள்ள ஒவ்வொரு நீதிமன்றத்திலும் உங்களைச் சந்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
from Latest News https://ift.tt/ZGpPEiK
0 Comments