உச்ச நீதிமன்றம் பாபர் மசூதி இடிப்பு வழக்கு, கோத்ரா ரயில் கலவர வழக்கு இரண்டையும் முடித்து வைத்திருக்கிறது.
இது தொடர்பான விசாரணையில் தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், ஜே.பி. பர்திவாலா ஆகியோர் கொண்ட அமர்வு, ``1992-ம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக, உத்தரப்பிரதேச அரசு மற்றும் அதன் அதிகாரிகளுக்கு எதிரான அவமதிப்பு வழக்குகளை முடித்துவைக்கிறோம்.
அயோத்தியில் ராம ஜென்மபூமி-பாபர் மசூதி நிலத் தகராறு வழக்குகளில் 2019-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்படுகிறது. காலப்போக்கில், இந்த வழக்குகள் உயிர்ப்புடன் இல்லை.
அதே போல கோத்ரா ரயில் விபத்துக்குப் பிந்தைய கலவரத்தைத் தொடர்ந்து தொடங்கப்பட்ட வழக்குகளும் காலப்போக்கில் பயனற்றதாகிவிட்டது. நீதிமன்ற உத்தரவின்படி சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி) தொடுத்துள்ள ஒன்பது முக்கிய வழக்குகளில், எட்டு வழக்குகள் நரோடா காவ்னில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகின்றன. ஒரு வழக்கில் இறுதி வாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அபர்ணா பட், இஜாஸ் மக்பூல், அமித் சர்மா ஆகியோர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டனர்" எனக் கூறி, இரு வழக்குகளையும் முடித்துவைத்தது
from Latest News https://ift.tt/2UCsjMJ
0 Comments