அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள தேஜ்பூர் பகுதியில் போக்குவரத்துக் காவலர்கள் சாலை விதிமீறல் செய்பவர்களிடம் அபராதம் விதித்துச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பேருந்தில் வந்த நபர் ஒருவர், தான் ஒரு போக்குவரத்து துறை உயரதிகாரி என சாலையில் அபராதம் விதிக்கும் காவலர்களுடன் இணைந்து அபராதம் வசூலித்துள்ளார். இதுவரை இந்த அதிகாரியைப் பார்த்ததில்லையே எனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மேலதிகாரிகளுக்கு தொலைப்பேசி மூலம் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். சம்பவ இடத்துக்கு வந்த உண்மையான உயரதிகாரிகள் அவரிடம் விசாரித்திருக்கின்றனர். அப்போது தான் அவர் போலியாக உடையணிந்து வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலிப்பது தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், குற்றம்சாட்டப்பட்ட நபர் மஃப்டியில் இருந்த காவலரிடமும் அபராதம் வசூலித்திருப்பதாகக் கூறப்படுகிறது. உடனே அவரை கைது செய்து காவலர்கள் விசாரித்துள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட நபர், "நான் இங்கு மட்டுமல்ல இது போலப் பல பகுதிகளில் பணம் வசூலித்துள்ளேன். சிறுவயது முதல் போலீஸ் ஆகவேண்டும் என ஆசை. ஆனால் என்னால் போலீஸ் ஆகமுடியவில்லை. அதனால், அந்த உடையை அணியத் தொடங்கினேன். அப்படியே பணம் வசூலிக்கத் தொடங்கிவிட்டேன்" எனத் தெரிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, அதற்காக போலீஸிடமே அபராதமா? என நொந்துக்கொண்ட காவல்துறை அவரை கைது செய்து மேலும் விசாரித்துவருகிறது.
from Latest News https://ift.tt/N7XSPwZ
0 Comments