அமெரிக்காவை சேர்ந்த மருந்து நிறுவனமான ஜான்சன் & ஜான்சனின் தயாரிப்பான பேபி பவுடர் உலகளவில் மிகவும் புகழ்பெற்றது. 136 ஆண்டுக்கால பாரம்பர்யத்தைக் கொண்ட இந்த நிறுவனம், பன்னாட்டு மருந்து மற்றும் நுகர்வோர் சுகாதார பொருள்களை உற்பத்தி செய்வதில் முன்னணியில் உள்ளது. இதன் தயாரிப்பான ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர், இந்தியா உள்பட பல உலக நாடுகளில் பலராலும் விரும்பப்பட்டு வந்தது.
இந்நிலையில், எதிர்வரும் 2023-ம் ஆண்டு முதல், பேபி பவுடர் விற்பனையை நிறுத்திக் கொள்வதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கு பதிலாக சோள மாவை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள பேபி பவுடரில் இனி கவனம் செலுத்த உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்தன. இந்த பவுடரை பயன்படுத்துவது புற்றுநோய்க்கு வழிவகுப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. வட அமெரிக்காவில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன.
இந்தக் குற்றச்சாட்டை ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்தது. முறையாக அறிவியல் ஆய்வுகள் மற்றும் ஒழுங்குமுறை ஒப்புதலுக்கு பின்னரே விற்பனை செய்யப்படுவதாக விளக்கம் தரப்பட்டது. எனினும், பல நாடுகளில் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் விற்பனை வெகுவாக சரிந்தது.
இதையடுத்து, பேபி டால்கம் பவுடர் விற்பனையை அடுத்தாண்டு முதல் நிறுத்தும் முடிவுக்கு வந்துள்ளது ஜான்சன் & ஜான்சன் நிறுவனம். எனினும் தங்களது டால்கம் பவுடர் மிகவும் பாதுகாப்பானது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
from Latest News https://ift.tt/B93xFOJ
0 Comments