பாராளுமன்றத்தில் தரப்பட்ட விவரங்களின் படி இதுவரை நிதி மோசடி செய்து வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றவர்களின் எண்ணிக்கை 38. கடந்த சில வருடங்களில் நிரவ் மோடி, விஜய் மல்லையா போன்றோர் நிதி மோசடி செய்து நாட்டை விட்டு தப்பி ஓடியுள்ளனர்.
இந்நிலையில், நிதிமோசடி செய்துவிட்டு வெளிநாடுகளில் தப்பிச் செல்வதை தடுக்க விமானங்களில் பயணிக்கும் பயணிகளின் விவரங்களை 24 மணிநேரத்திற்கு முன்பே கட்டாயமாக தெரிவிக்க வேண்டும் என விமான நிறுவனங்களுக்கு நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது.
அதன்படி விமான நிலையங்கள் பயணிகளின் பெயர், தொடர்பு கொள்ள வேண்டிய விவரங்கள், பேமென்ட் விவரங்களை தெரிவிக்க வேண்டும். இந்த செயல்முறையை அறிமுகப்படுத்தியன் மூலமாக சர்வதேச ‘பயணிகளின் பெயர் பதிவு’ (passenger Name Record) செய்யும் 60 நாடுகளில் இந்தியாவும் ஒன்றானது.
விமான நிறுவனங்கள் அரசுக்கு தெரிவிக்க வேண்டிய விவரங்கள்:
*பயணியின் பெயர், பில்லிங் அல்லது பேமென்ட் விவரம் ( கிரெடிட் கார்டு நம்பர்), டிக்கெட் விநியோகிக்கப்பட்ட நாள், பி.என்.ஆர் எண், மொபைல் நம்பர், இ - மெயில் ஐ.டி, டிராவல் ஏஜென்சியின் விவரங்கள் உள்ளிட்ட 19 தகவல்களை அரசுக்கு கட்டாயமாக அளிக்க வேண்டும்.
*இந்த விவரங்களை தரத் தவறிய நிறுவனங்களுக்கு ரூ. 25,000 முதல் ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
from Latest News https://ift.tt/HWiUtBo
0 Comments