`சாதாரணமாக செய்த சிறு செயல்...’ - துபாய் இளவரசரால் பாராட்டப்பட்ட உணவு டெலிவரி ஊழியர்!

துபாய் சாலையில் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இரண்டு பெரிய கற்கள் இருக்கிறது. அதை கவனித்த உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவர், சிக்னலில் வாகனம் நிற்கும் போது அந்த பெறிய கற்களை அப்புறப்படுத்துகிறார். அதை காரிலிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். அந்த ஊழியரை பாராட்டி அந்த வீடியோவை பெருமளவில் பகிரப்பட்டது.

இந்த நிலையில், ஐக்கிய அமீரகத்தின் தலைவரும், துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம்-ன் மூத்த மகன் ஷேக் ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தூம் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை பதிவிட்டு, ``நற்செயல்கள் பாராட்டப்பட வேண்டும். இவரைக் கண்டுபிடித்து தர முடியுமா?" எனக் கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து, அதிகாரிகள் பாகிஸ்தானை சேர்ந்த அப்துல் கஃபூர் எனும் அந்த இளைஞரைக் கண்டுபிடித்து அவருடன் துபாயின் இளவரசர் ஷேக் ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தூம்-வுடன் தொலைப்பேசியில் பேச வைத்தனர். அப்போது இளவரசர், ``உங்களின் செயல் பாராட்டத்தக்கது. இப்போது நான் மற்றொரு நாட்டில் இருக்கிறேன். துபாய் வந்ததும் உங்களை சந்திக்கிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.

அதே போல இளவரசர் துபாய் திரும்பியதும், அந்த உணவு டெலிவரி செய்யும் அப்துல் கஃபூரை சந்தித்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார். மேலும், அந்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு "அப்துல் கஃபூரை சந்திப்பதில் பெருமை கொள்கிறேன்" எனப் பதிவிட்டிருக்கிறார். இது தொடர்பாக அப்துல் கஃபூர், "சாதாரணமாகச் செய்த சிறு செயல் இவ்வளவு அன்பை பெற்றுத்தரும் என நினைக்கவில்லை. துபாய் இளவரசர் என்னை நேரில் வரவழைத்துப் பாராட்டியது வாழ்வில் மறக்க முடியாத தருணம்" எனத் தெரிவித்துள்ளார்.



from Latest News https://ift.tt/i9TUhQI

Post a Comment

0 Comments