டெல்லி தொழிலதிபரை மிரட்டி ரூ.215 கோடி பறித்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் மிரட்டி பறித்த பணத்தில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், நூரா பதேகி ஆகியோருக்கு கோடிக்கணக்கில் பரிசுப்பொருள்களை வாங்கி கொடுத்துள்ளார். இதில் நடிகை ஜாக்குலினுக்குத்தான் அதிகப்படியான பணத்தை சுகேஷ் செலவு செய்துள்ளது அமலாக்கப்பிரிவின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக ஜாக்குலினிடம் பல முறை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பரிசுப்பொருள்களை சுகேஷ் சந்திரசேகரிடம் பெற்றுக்கொண்டதை ஜாக்குலினும் உறுதிபடுத்தி இருக்கிறார். சமீபத்தில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் இவ்வழக்கில் துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

அதில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். சுகேஷ் சந்திரசேகர் மிரட்டி பணம் பறிப்பது ஜாக்குலினுக்கு தெரிந்திருக்கிறது என்று அமலாக்கப்பிரிவு குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது. இது குறித்து ஜாக்குலின் பெர்னாண்டஸ் தனது பதில் அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார். அதில், ``நான் அதிகாரிகளின் விசாரணைக்கு முழு அளவில் ஒத்துழைப்பு கொடுத்தேன். சுகேஷ் சந்திரசேகரின் வலையில் சிக்கிக்கொண்ட நான் பாதிக்கப்பட்டவள். என்னை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பாதிக்கப்பட்டவளாக கருத மறுக்கின்றனர். எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றது. நான் இவ்விவகாரத்தில் ஏமாற்றப்பட்டதையோ அல்லது இதில் சிக்க வைக்கப்பட்டதையோ விசாரணை அதிகாரிகள் அங்கீகரிக்க மறுக்கின்றனர். இது தவறான வழக்கு. சுகேஷ் சந்திரசேகரிடம் பரிசுப்பொருள்களை நான் மட்டும் வாங்கவில்லை. நடிகை நூரா பதேகி போன்ற பிரபலங்களும் வாங்கினர். அவர்கள் சாட்சிகளாக்கப்பட்டுள்ளனர். ஆனால் நான் மட்டும் இதில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருக்கிறேன்.
இது விசாரணை அதிகாரிகளின் தவறான, உள்நோக்கத்துடன், பாரபட்சமான அணுகுமுறையை தெளிவாக காட்டுகிறது. அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கும் வைப்புத்தொகை, சுகேஷ் சந்திரசேகரின் அறிமுகத்திற்கு முன்பே முதலீடு செய்யப்பட்டது ஆகும். அவை எனது உழைப்பில் சம்பாதித்தது ஆகும்” என்று தனது பதிலில் ஜாக்குலின் தெரிவித்துள்ளார். ஜாக்குலின் இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தாலும் இன்னும் கைது செய்யப்படாமல் இருக்கிறார். சுகேஷ் தன்னை ஜாக்குலினிடம், தான் சன் டிவி உரிமையாளர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். திகார் சிறையில் இருந்த சுகேஷ் சந்திரசேகர் சமீபத்தில் தான் வேறு சிறைக்கு மாற்றப்பட்டார். திகார் சிறையில் தனக்கு ஆபத்து இருப்பதாக கூறி வேறு சிறைக்கு மாற்றும் படி சுகேஷ் கேட்டுக்கொண்டதையடுத்து வேறு சிறைக்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
from Latest News https://ift.tt/iAbkPZD
0 Comments