Doctor Vikatan: எடையைக் குறைக்க உதவுமா பால் சேர்க்காத பிளாக் காபி?

பால் கலக்காத பிளாக் காபி குடிப்பது உடலுக்கு ஆரோக்கியமானதா? பால் சேர்த்த காபிக்கு பதில் அதை எடுத்துக் கொள்ளலாமா? எந்த வேளையில் பிளாக் காபி குடிப்பது சிறந்தது? பிளாக் காபி குடிப்பது எடையைக் குறைக்க உதவும் என்பது உண்மையா?

ஷீபா தேவராஜ்

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்

பால் சேர்த்த காபியைவிட பிளாக் காபி நிச்சயம் சிறந்ததுதான். பிளாக் காபியில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மிக அதிகம். கஃபைன் தவிர. அதில் வைட்டமின் பி2 மற்றும் மக்னீசியம் சத்தும் அதிகம் உள்ளது.

செல்களில் ஏற்படும் சிதைவுக்கு எதிராகப் போராடி, சில வகை உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் ஆபத்தையும் குறைப்பதாக, நிரூபிக்கப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

workout (Representational Image)

எடைக்குறைப்பு முயற்சியில் இருப்பவர்களுக்கு பிளாக் காபி பெருமளவில் கைகொடுக்கும். அதாவது வொர்க் அவுட் செய்வதற்கு முன் பிளாக் காபி குடிப்பது, கலோரிகளை எரிக்க உதவும். எனவே எடைக்குறைப்பு முயற்சியில் இருப்பவர்கள், வொர்க் அவுட் செய்வதற்கு முன் சிறிதளவு காபி அருந்துவது, விரைவான பலனைக் காண உதவும்.

காபியில் உள்ள கஃபைன், வளர்சிதை மாற்ற வேகத்தை 3 முதல் 11 சதவிகிதம் வரை அதிகரிக்கும். வளர்சிதை மாற்றம் அதிகரித்தால், உடலின் கொழுப்பு கரையும் வேகமும் கூடும்.

பசியைக் கட்டுப்படுத்துவதிலும் கஃபைனுக்கு பெரும்பங்கு உண்டு. அதனால் தான் இன்ட்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் இருப்பவர்களுக்கு, இடையில் பிளாக் காபி மட்டும் அருந்த அனுமதி வழங்கப்படும்.

Coffee (Representational Image)

பிளாக் காபி, பசி உணர்வைக் கட்டுப்படுத்தி, சரியான அளவு உணவை உண்ண உதவுகிறது. காபியின் சுவையும் பிரமாதமாக இருக்கும் என்பதால், அதைக் குடித்த உடன், மனநிலையில் ஒருவர் உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.

இத்தனை நல்ல விஷயங்களைக் கொண்டது பிளாக் காபி. ஆனாலும் அதன் சுவைக்கு அடிமையாகிவிடாமல், அளவோடு எடுத்துக்கொள்வது அவசியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Latest News https://ift.tt/sTCprRz

Post a Comment

0 Comments