வம்பு! | குறுங்கதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

"மேடம்,உங்க கிட்ட ஒன்னு சொல்லனும்", தயங்கியபடி வந்து நின்ற வினோத்தை நிமிர்ந்து பார்த்தேன்.


என்ன? வீட்டில் ஏதேனும் பிரச்சனை யா?


"இல்ல மேடம். வேலை முடிஞ்சு போகும் போது சொல்லறேன்" என்றபடி என் மேஜையிலிருந்த பைல்களை எடுத்து கொண்டுபோனார்.


வினோத் எங்கள் அலுவக ப்யூன். என்னைவிட சற்று மூத்தவர். கோட்டூர்புரம் குடிசை பகுதியிலிருந்து வருகிறார். அப்பா குடிகாரர். அம்மா அவருடன் சதா சண்டை போட்டுகொண்டு அம்மா வீட்டிற்கு போய்விடுவாராம்.
வினோத் தான் தனது இரண்டு தம்பிகள்,இரண்டு தங்கைகளை பாதுகாகும் பொறுப்பை சிறுவயது முதலே ஏற்றுகொண்டாகிவிட்டது.

8 ம் வகுப்பு பாஸான கையோடு கிடைத்த வேலையெல்லாம் தார்சாலை போடுவது, சுண்ணாம்பு அடிப்பது,சைக்கிள்கடை, ஹோட்டல, தோட்டவேலை என்று செய்து அவர்களை பசிஇல்லாமல் பார்த்து கொண்டதோடு படிக்கவும் வைக்கிறார்.
இந்த வேலை அப்படி.

ஏதோ வேலை செய்த இடத்து பெரியவர் வாங்கி தந்தது தான். அதற்கு பிறகு வீட்டு நிலமை நல்ல விதமாகிவருகிறது.
ஆனால் பாதியில் விட்ட படிப்பை நினைத்து வினோத் ஏங்குவது தெரிந்தபோது நான் இயல் பாக தேவையான உதவிகளை செய்து தந்தேன் .10 வகுப்பு பாஸ் ஆனதால் உத்யோகம் நிரந்தரம் ஆனது. இப்போது பட்டப்படிப்பு தொடர்கிறது.வெற்றிபெற்றால் என்னை மாதிரி பதவி உயர்வு கிடைக்கும் என்பதால் தீவிரமாக படித்துவருகிறார். என்னுடைய நண்பர்கள் பலர் வினோத்க்கு ஆசிரியர்கள்!

Representational Image

இப்போது என்ன பிரச்சனையோ?


மாலை காண்டீனில் காபி அருந்தியபடி "என்னதான் பிரச்சனை சொல்லுங்க"


"இல்லை நம்ம ஆபிஸ் சுப்புரமணிஸார் உனக்கும் மேடத்துக்கும் என்ன ",ன்னு கேட்டார்.


அப்படி தினம் என்னதான் பேசிறீங்க என்றார்.
" அப்படியா? உங்க வயதென்ன?
25


என்னோடது ...21


நான் இந்த ஆபிஸ்ல எத்தனை வருஷம் இருக்கேன்

ஒன்று

நீங்க?

5

ஆபிஸ்ல மொத்தம் எத்தன பேர் இருக்காங்க?

ஆம்பிளை 25,லேடிஸ் 5

உங்க குடும்ப சூழல் எல்லாருக்கும் தெரியும்தானே?

ஆமாம் மேடம்

இதுவரைக்கும் யாராவது உங்களுக்கு உதவி செஞ்சிருக்காங்களா?

இல்லை மேடம்

நான் கேள்வி கேட்க கேட்க வினோத் முகம் வேர்த்து வெல வெலத்து விட்டது

ஆக நம்ப ஆபிஸ்ல சுப்பிரமணிதான் ரொம்ப நல்ல மனிதர்.

உங்ககிட்ட மனசில பட்டதை நேராவே கேட்டாரே. அதை பாராட்டாமல் இப்படி நடுங்குவாங்களா?

குனிந்திருந்த தலையை நிமிர்த்திய வினோத் முகம் மலர்ந்தது
கிளம்புங்க வீட்டுக்கு போகலாம்.

நல்லா படிக்கிற வழிய பாருங்க.

-காஞ்சனா மாலா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.



from Latest News https://ift.tt/ezI4CNk

Post a Comment

0 Comments