அக். 1 கருட சேவை; அக். 4 ரதோற்சவம்; பக்தர்கள் வெள்ளத்தால் களைகட்டப்போகும் திருப்பதி பிரம்மோற்சவம்!

திருமலை திருப்பதில் ஆண்டுதோறும் நடைபெறும் புரட்டாசி நவராத்திரி பிரம்மோற்சவம் வரும் 27 - ம் தேதி தொடங்க இருக்கிறது. இதற்கான கொடியேற்றம் (26.9.22) இன்று நடைபெறுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் அனுமதிக்கப்படாமல் கோயிலுக்குள்ளேயே பிரம்மோற்சவம் நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு பக்தர்கள் பங்களிப்போடு வாகன சேவைகள் களைகட்ட பிரம்மோற்சவம் நடைபெற இருக்கிறது.

திருமலை திருப்பதி

எந்த நாளில் என்ன சேவை?

மலையப்ப சுவாமி பிரம்மோற்சவ நாள்களில் பல்வேறு வாகனங்களில் ஸ்ரீதேவி பூதேவி தாயாரோடு எழுந்தருளி வீதியுலா வருவார்.

செப்டம்பர் 27 : பெத்த சேஷ வாகனம் -

செப்டம்பர் 28 : காலை - சின்ன சேஷ வாகனம்

மாலை - ஹம்ச வாகனம்

செப்டம்பர் 29 : காலை - சிம்ம வாகனம்

மாலை - முத்துப் பல்லக்கு

செப்டம்பர் 30 : காலை - கற்பக விருட்ச வாகனம்

மாலை - சர்வ பூபால வாகனம்

அக்டோபர் 1 : காலை - மோகினி அவதாரம்

நண்பகல் - கருட வாகனம்

அக்டோபர் 2 : காலை - அனுமந்த வாகனம்

மாலை - தங்க ரதம்

அக்டோபர் 3 : காலை - சூரிய பிரபை வாகனம்

மாலை - சந்திரப் பிரபை

அக்டோபர் 4 : காலை - தேர்த்திருவிழா

மாலை - குதிரை வாகனம்

அக்டோபர் 5 : சக்கர ஸ்நானம்

அக்டோபர் 6 : கொடியிறக்கம்

பொதுவாக நாள் ஒன்றுக்கு சுமார் 60 ஆயிரம் பக்தர்களும் விடுமுறை நாள்களில் 70 பக்தர்களும் தற்போது தரிசனம் செய்துவருகிறார்கள். பிரம்மோற்சவ நாள்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிவார்கள். எனவே அவர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகளைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்துவருகிறது. பக்தர்களுக்குத் தங்குமிடம், உணவு ஆகியவை எந்தக் குறையும் இன்றிக் கிடைப்பதை உறுதி செய்ய நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

பராகமணி கட்டடம்

காணிக்கைகளை எண்ணப் புதிய கட்டடம்

திருப்பதியில் தினமும் கோடிக்கணக்கான பணம் உண்டியலில் குவிகிறது. இதை கருவறைக்குப் பின்புறம் உள்ள சிறிய அறையில் வைத்து கணக்கிடுவார்கள். இதற்குப் பரகமணி சேவை என்று பெயர். தற்போது அதற்குத் தனியாக ஒரு அறை கட்டப்பட்டுள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த பக்தர் ஒருவர் அன்னபிரசாதம் காம்ப்ளெக்ஸ் அருகே 10 கோடி ரூபாய் செலவில் தனியாக ஒரு கட்டடம் கட்டிக் கொடுத்திருக்கிறார். இதை செப்டம்பர் 28 ம் தேதி திருமலைக்கு வரும் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி திறந்துவைக்க இருக்கிறார். இங்கு 2.8 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் எண்ணும் இயந்திரம் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்தில் அதிநவீன கண்காணிப்பு கேமரா, குண்டு துளைக்காத கண்ணாடிக் கதவுகள் பொருத்தப்பட்டு இயந்திரங்கள் வாயிலாக நாணயங்கள் எண்ணப்படுவதை கண்ணாடிக்கு வெளியே இருந்து பக்தர்கள் பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது.



from Latest News https://ift.tt/M3s2E1K

Post a Comment

0 Comments