இந்தியாவில் உள்ள சிறைகளில் குற்றவாளிகள், விசாரணைக் கைதிகள், தடுப்புக் காவல் கைதிகள் மற்றும் இதில் சேராத பிற கைதிகள் என நான்கு வகையான கைதிகள் உள்ளனர். தடுப்புக்காவல் கைதிகள் என்பவர்கள் விசாரணையின்றி சட்டரீதியாகக் காவலில் கைதாகி இருப்பவர்கள் என்பதைக் குறிக்கும். இந்தச்சூழலில், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2021-ஆம் ஆண்டு இந்தியச் சிறைகளில் உள்ள இஸ்லாமிய கைதிகள் குறித்துக் கணக்கெடுப்பு செய்யப்பட்டது. அதன்படி தடுப்பு காவல், 2019-ஆம் ஆண்டு 38% ஆக இருந்த இஸ்லாமிய தடுப்பு காவல் கைதிகளின் எண்ணிக்கை 2020-இல் 32% ஆகவும், 2021 ல் 30% ஆகவும் உள்ளது. விசாரணை கைதிகளைப் பொறுத்தவரையில் 2019ல் 20% ஆக இருந்தது 2020ல் 21% ஆக உயர்ந்தது. 202ல் இது 20% க்கும் கீழ் குறைந்துள்ளது.
இதேபோல், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, 2021ம் ஆண்டில் இந்தியச் சிறைகளில் உள்ள இந்து கைதிகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. இதில், 2019 மற்றும் 2020ல் 70% க்கும் மேல் இருந்த விசாரணை கைதிகள் எண்ணிக்கை 2021-ல் 75% நெருங்கியது. தடுப்புக்காவலில் உள்ள கைதிகளைப் பொறுத்தவரை 2019, 2020-ல் 60%க்கும் கீழ் இருந்த கைதிகள் எண்ணிக்கை 2021ல் 60%-ஐ தாண்டியுள்ளது.
தடுப்புக் காவல் கைதிகளின் எண்ணிக்கை ஒப்பிட்டு அளவில் ஜம்மு காஷ்மீர், உத்தரப் பிரதேசம், ஹரியானா, குஜராத், தமிழ்நாடு, நாகாலாந்து ஆகிய மாநிலங்களிலேயே அதிகமாக உள்ளது. குறிப்பாக, அஸ்ஸாம் சிறைகளில் உள்ள கைதிகளில் 41 சதவீதம் விசாரணைக் கைதிகள் முஸ்லிம்கள். அந்த மாநிலத்தின் மக்கள் தொகையில் முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை 34 சதவீதம் தான். மொத்த மக்கள் தொகையின் எண்ணிக்கையை விட, சிறைச்சாலைகளில் விசாரணைக் கைதிகளாக உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை ஒப்பீட்டு பார்க்கும் போது குஜராத், உத்தரப் பிரதேசம், ஹரியானா, ஜம்மு - காஷ்மீரில் அதிகமாக உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Source: Prison Statistics of India
from Latest News https://ift.tt/KBqTM7P
0 Comments