வீட்டுச் சிறையில் சீன அதிபர் ஜி ஜின்பிங்? - சமூக ஊடகங்களில் பரவிய தகவல்!

சமீபத்தில் உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்ட் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில், சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்தியப் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் சமூக ஊடகங்களில், சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத் தலைவர் பதவியில் இருந்து அதிபர் ஜி ஜின்பிங் நீக்கப்பட்டு விட்டார் என்ற தகவல் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவுகிறது. அதேபோல, சீன மக்கள் பலர் தங்கள் ட்விட்டரில் "அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்" என்ற தகவலைப் பகிர்ந்துள்ளனர்.

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் இந்த தகவலை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஜி ஜின்பிங்

சமீபத்தில், சீனாவில் 2 மூத்த அமைச்சர்களுக்கு மரண தண்டனையும், 4 அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனையும் இந்த வாரம் விதிக்கப்பட்டது. இவர்கள் சீன அதிபருக்கு எதிராக அரசியல் பிளவை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், ஜி ஜின்பிங்குக்கு எதிராகச் செயல்படுபவர்கள், அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவலை பரப்புவதாகக் கூறப்படுகிறது.

பிஎல்ஏ அமைப்பின் முழுக் கட்டுப்பாட்டில் ராணுவம் உள்ளதாகவும், சீனாவின் அதிபராக லீ கியாமிங் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் ஜி ஜின்பிங் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து எந்த வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை



from Latest News https://ift.tt/6CxTebn

Post a Comment

0 Comments