`கவுன்சிலர்களுக்கு ரூ.1 லட்சம், 144 கிராம் தங்கம், 1 கிலோ வெள்ளி’ - சர்ச்சையில் கர்நாடக அமைச்சர்

அமைச்சர்கள் தங்களது மாவட்டத்தில்/ தொகுதியில் நடக்கும் தேர்தலில் தனது கட்சி வேட்பாளர்கள் அதிகம் பேரை வெற்றி பெற வைத்து தலைமையை மகிழ்ச்சியடைய வைக்கவேண்டும் என்ற நோக்கில் வேலை செய்வது வழக்கம். கர்நாடகாவில் சமீபத்தில் நடந்து முடிந்த மாநகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற கட்சியினரை அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ஆனந்த் சிங் வித்தியாசமான முறையில் கெளரவித்திருக்கிறார். வெற்றி பெற்ற மாநகராட்சி உறுப்பினர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் அனைவரையும் வரவழைத்து ஒரு லட்சம் பணம், 144 கிராம் தங்கம், ஒரு கிலோ வெள்ளி, ஒரு வேஷ்டி, ஒரு பட்டுப்புடவை, உலர்ந்த பழங்கள் அடங்கிய பாக்ஸ் போன்றவை கிஃப்டாக கொடுக்கப்பட்டது.

ஆனந்த் சிங்

பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு ஒரு லட்சத்திற்கு குறைவான ரொக்க பணம் வழங்கப்பட்டது. அதோடு தங்கம் வழங்கப்படவில்லை. ஆனால் மற்ற அனைத்து பொருட்களும் பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கும் வழங்கப்பட்டது. ஆனால் சில உறுப்பினர்கள் பரிசை வாங்கிக்கொள்ள மறுதுள்ளனர். சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இவை கொடுக்கப்படுவதாக தெரிவித்தனர்.

இக்குற்றச்சாட்டை அமைச்சரின் உதவியாளர் மறுத்துள்ளார். ``கர்நாடகா சட்டமன்றத்திற்கு அடுத்த ஆண்டு மேச்மாதம் தேர்தல் நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியையொட்டி ஆனந்த் சிங் பரிசுகளை அனுப்பி வைப்பது வழக்கமான ஒன்றுதான். தேர்தல் வருவதால் இத்தீபாவளி பரிசு சர்ச்சையை கிளப்பி இருக்கிறது” என்று அவரது அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

பெல்லாரியை சேர்ந்த ஆனந்த் சிங்கிற்கு ஏராளமான சுரங்கங்கள் இருக்கிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் தனக்கு 70 கோடி ரூபாயிக்கு சொத்து இருப்பதாக தெரிவித்திருந்தார். சுரங்க மோசடி தொடர்பாக 2009-ம் ஆண்டு இரண்டு முறை கைது செய்யப்பட்டார். அதோடு கர்நாடகாவில் இருந்து சட்டவிரோதமாக இரும்புத்தாதுக்களை ஏற்றுமதி செய்வதாக சிபிஐயும் ஆனந்த் சிங்கை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.



from Latest News https://ift.tt/sG4gRK6

Post a Comment

0 Comments