`தண்ணி பட்டா தாங்கமாட்டேன்!' 65 ஆண்டுகள் குளிக்காத மனிதர் மரணம்; தண்ணீர்தான் காரணமா?

65 ஆண்டுகள் குளிக்காமல் இருந்த ஈரானைச் சேர்ந்த, உலகின் மிக அழுக்கான மனிதர் தனது 94வது வயதில் உயிரிழந்தார்.

ஈரானைச் சேர்ந்தவர் அமு ஹாஜி. இவர் கடந்த அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக, தன் உடலில் சோப்பு, தண்ணீர், மழைநீர் என எதுவும் தன் உடலை நனைக்காமல், குளிக்காமல் இருந்து வந்துள்ளார்.

Bath (Representational Image)

உடலில் தண்ணீர் பட்டால், உடல் நலக்குறைவு ஏற்படும் என, அவர் உறுதியாக நம்பியதால் இததனை ஆண்டுகளாக குளிக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் அவர் தனது 94ம் வயதில் தேஜ்கா என்னும் தனது கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது, ``சிறுவயதில் அவருக்கு நேர்ந்த சில உணர்ச்சிகரமான சம்பவத்தால் அவர் தண்ணீர் மற்றும் சுத்தத்தை அறவே வெறுத்துவிட்டார். இருப்பினும், சில மாதங்களுக்கு முன் நாங்கள் மிகவும் கட்டாயப்படுத்தி அவரைக் குளிக்க வைத்தோம்” என்றனர்.

கடந்த 2013ல் இவரைப் பற்றி “ The stranger life of Amou haji” என்ற,ஆவணப்படம் வெளியானது. இவர் சாலையோரங்களில் இறந்துகிடக்கும் விலங்குகளை உணவாகவும், அதன் கழிவுகள் கொண்டு தானே தயார் செய்யும் சிகரெட்டைக் குடித்து வந்ததாகவும், தொடர்ந்து ஒரே நேரத்தில் அதிக சிகரெட் புகைக்கும் பழக்கம் கொண்டவர் இவர்.., எனவும் சொல்லப்படுகிறார். தூய்மையாக, சுத்தமாக இருப்பதே நோய்வாய்ப்பட காரணமாக இருக்கும் என்பதை அவர் இறுதிவரை நம்பிக்கொண்டிருந்தார்.

மாதிரி படம்

இதேபோல் இந்தியாவில் வாரணாசியில் 30 வருடங்களாக ஒருவர் குளிக்காமல் இருப்பதாக 2009ல் செய்தி வெளியானது.வாரணாசியில் ஒரு கிராமத்தை சேர்ந்த கைலாச கலா சிங் என்பவர், நாடு எதிர்கொள்ளும் எல்லா பிரச்னைகளையும் முடிவுக்கு கொண்டுவரும் வகையில் 30 ஆண்டுகளாக குளிக்காமல் இருப்பதாகச் சொல்கிறார். ஆனால் அவர் தினமும் இரவு மக்களைக் கூட்டி வைத்துக்கொண்டு, மைதானத்தின் நடுவில் தீ முட்டி அதன் அருகில், ஒற்றைக் காலில் நின்று கஞ்சா புகைத்துக் கொண்டே, சிவனை வேண்டிக் கொள்வாராம்.

இது குறித்து அவரிடம் கேட்டபோது சொன்னாராம், “இது தீக்குளியல். தண்ணீரைப் போல் தான். இது உடலின் அனைத்து கிருமிகளையும், தொற்றுகளையும் அழிக்க உதவுகிறது என்றார்”…!

சில மாதங்களுக்கு முன்பு, அமு ஹாஜி யை குளிக்க வைத்தபோது அவர் மனமுடைந்து காணப்பட்டார். அதன் பிறகுதான் அவர் இறந்தார் எனவும் பலர் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ஆனால், மருத்துவர்கள் பரிந்துரைப்படி உடலை சுத்தமாக வைத்திருப்பதே ஆரோக்கியமானது. இதுபோன்ற செயல்கள் வரவேற்கத்தக்கதல்ல.



from Latest News https://ift.tt/ekYAI28

Post a Comment

0 Comments