`நீ மட்டும்தான் கடிப்பியா...' தன்னை கடித்த பாம்பை கடித்து கொன்ற சிறுவன்!

``பாம்பு என்றால் படையே நடுக்கும்’’ என்று கூறுவதுண்டு. ஆனால் சிறுவன் ஒருவன் தன்னை கடித்தப் பாம்பைத் திரும்பக் கடித்துக் கொன்ற விநோதமான சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. 

snake

சத்தீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூர் மலைவாழ் பகுதியில், பாஹ்டி கோர்வா (Phahdi Korwa) என்ற பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த இனத்தைச் சேர்ந்த சிறுவன் தான் 12 வயதான தீபக் ராம். இவன் தன்னுடைய வீட்டிலிருந்து சற்று தொலைவில் உள்ள அக்காவின்  வீட்டுக்குச் சென்றிருக்கிறான். 

அங்கே விளையாடிக் கொண்டிருக்கையில், பாம்பு ஒன்று இவன் கையில் கடித்துள்ளது. கடித்த பாம்பை வளைத்துப் பிடித்து, இறக்கும் வரை அதனைப்  பல முறை திரும்பக் கடித்துள்ளான். இந்த சம்பவத்தை அறிந்த பின் சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டதில், தற்போது நலமாக உள்ளான். 

பாம்பை கடித்து கொன்ற சிறுவன்!

ஜாஷ்பூர் பகுதியில் ஏராளமான பாம்புகள் காணப்படுவதால், இப்பகுதியை உள்ளூர் மக்கள் `நாகலோகம்’ (Naglok) என்று அழைக்கின்றனர். இப்பகுதியில் பாம்பு மக்களைக் கடித்து அவ்வப்போது உயிரிழப்புகள் நிகழ்வதாகக்  கூறப்படுகின்றன. அதோடு பாம்பு கடித்தால், அதனை திரும்ப கடிக்கவேண்டும் என்ற நம்பிக்கையும் இம்மக்களிடையே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



from Latest News https://ift.tt/jnQlT7R

Post a Comment

0 Comments