அரசு பென்ஷன்தாரர்களுக்கு பிரத்யேக இணையதளம்: என்னென்ன சேவைகள் கிடைக்கும்?

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் பென்ஷன் பெறுபவர்களுக்கு பயனளிக்கும் பிரத்தியோக இணையதளமான பவுசியா 9.0 என்ற சேவையை நாட்டிற்கு அர்ப்பணித்துள்ளார். இந்த இணைய தளத்தை பாரத ஸ்டேட் வங்கி (SBI) வடிவமைத்துள்ளது.

பவுசியா | bhavishya

 இந்த இணைய தளம் மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பென்ஷன் குறித்த அனைத்து சேவைகளை வழங்கும்  ஒரே இணையதளமாக இனி இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 அரசு ஊழியர்களுக்கு பென்ஷன் வழங்கும் 16 வங்கிகள் இந்த பிரத்யேக இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர் எந்த வங்கி மூலமும் பென்ஷன் பெற்றாலும் அது பற்றிய அனைத்து விவரங்களையும் பவுசியா இணையதளத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

அரசு ஊழியர்கள் எந்த வங்கி மூலம் பென்ஷன் பெற்றுக் கொள்வது என்பதை இந்த இணையதளத்தின் மூலம் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்.

பவுசியா | bhavishya

ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு சேவைகளை மாற்றிக் கொள்ள விரும்பினாலும் இந்த இணையதளத்தின் மூலம் அதனை மாற்றி அமைத்திட முடியும். பென்ஷன் தொடர்பான ஸ்டேட்மெண்ட் விவரங்கள், வருமான வரி தொடர்பான விவரங்கள், நாமினியை மாற்றி அமைப்பது, வாடிக்கையாளர்களின் விவரங்களை மாற்றி அமைத்துக் கொள்வது போன்ற அனைத்து நடவடிக்கைகளும் இந்த இணையதளத்தின் மூலம் செய்து கொள்ளலாம்.

 மேலும் பென்ஷன் தொடர்பான புகார்கள் இந்த இணையதளத்தின் மூலம் பதிவு செய்யவும் முடியும். 17 வங்கிகளையும் ஒன்றிணைத்து ஒரே இடத்தில் பென்ஷன் தொடர்பான அனைத்து சேவைகளை வழங்கும் வகையில் இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே சாளரத்தின் கீழ் அனைத்து விவரங்களும் கிடைக்க பெறுவதால் இந்த நடவடிக்கை அனைத்து பென்ஷன் பெறும்  அரசு ஊழியர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். பென்ஷன் பெறும் அரசு ஊழியர்கள் இனி பவுசியா ( https://bhavishya.nic.in ) இணைய தளம் மூலம் பயன்பெறலாம்.



from Latest News https://ift.tt/z4fF9mr

Post a Comment

0 Comments