சேலம், ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த அய்யனார் மனைவி ஞானாம்பாள். பிறவி விழிச்சாவல் மாற்றுத்திறனாளியான இவர், கடந்த 8 மாதத்திற்கு முன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரிடம் வாழ்வாதாரத்திற்காக ஆவின் பாலகம் அமைத்து தரவேண்டி விண்ணப்பம் அளித்திருந்தார். அதன்மூலம் மாற்றுத்திறனாளிகளுக்காக வழங்கக்கூடிய 110-விதியின் கீழ் ஆவின் பாலகம் அமைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பின்னர் மாற்றுத்திறனாளிகள் துறை மூலம் ஆவின் பாலகம் அமைத்துக்கொள்ள 50 ஆயிரம் நிதி உதவியும் கிடைத்துள்ளது. அதனை வைத்து தான் கையிலிருந்த பணத்தையும் சேர்த்து ஒரு ஆவின் இரும்பு பெட்டி மூலம் கடை தயார் செய்து அரசு குமாரமங்கலம் மருத்துவமனைக்கு வெளியே தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் கடை வைத்தார்.

அப்போது அதனை திறக்கலாம் என்று முற்பட்டபோது சில அரசியல் புள்ளிகள் அதனை திறப்பதற்கு முட்டுக்கட்டை போட்டதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி ஜூனியர் விகடனில் வீடியோ செய்தி வெளியிட்டிருந்தோம். அதன்மூலம் சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு சேலம் மாவட்ட நிர்வாகமும், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரனும் அதனை முறையாக பரிசீலனை செய்து ஆவின் பாலகம் சம்பந்தப்பட்ட இடத்தில் திறப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து மாற்றுத்திறனாளி ஞானாம்பாள் பேசியபோது, “இந்த கடை பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் கிடைத்துள்ளது. நான் கடையை திறக்கக்கூடாது என்று பலர் குற்றச்சாட்டுகளை வைத்தனர். ஆனால் முறையாக விசாரணை செய்து சேலம் மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும், காவல்துறையும் தற்போது நான் கடையை திறக்க அனுமதி அளித்துள்ளனர்” என்றார்.
from Latest News https://ift.tt/t8e2INE
0 Comments