தென்காசி: ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையான பெண் தற்கொலை - ரூ.70,000 இழந்ததால் விபரீத முடிவு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வேலாயுதபுரம் கிராமத்தில் குடியிருந்து வந்தவர், அஜய்குமார் மண்டல். அவரின் மனைவி ஸ்ரீதனா மாஞ்சி. ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த இருவரும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வாடகை வீட்டில் குடியேறியுள்ளனர். இருவருமே பெருமாள்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வந்திருக்கிறார்கள். ஓய்வு நேரங்களில் ஆன்லைன் ரம்மி விளையாடிப் பழகிய நிலையில், அதில் இருந்து மீளமுடியாத அளவுக்கு அடிமையானார்கள்.

ஆன்லைன் விளையாட்டில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக ஸ்ரீதனா மாஞ்சி வேலைக்குச் செல்லாமல் லீவு எடுத்து வீட்டில் இருந்துள்ளார். மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த அஜய்குமார் மண்டல், வீடு திறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியுடன் உள்ளே சென்றுள்ளார். அங்கு அவரின் மனைவி ஸ்ரீதனா மாஞ்சி தூக்கு மாட்டி தற்கொலை செய்திருந்தார். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கரிவலம்வந்தநல்லூர் போலீஸார் வந்து உடலைக் கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரின் செல்போனை ஆய்வு செய்தபோது, ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 70,000 ரூபாய் பணத்தை இழந்திருப்பது தெரியவந்துள்ளது. அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.

ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான வட மாநில பெண் தொழிலாளி ஸ்ரீதனா மாஞ்சி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதில் வசிக்கும் வடமாநிலத் தொழிலாளர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, ஆன்லைன் சூதாட்டத்தைத் நிரந்தரமாகத் தடுக்கும் வகையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் ‘ஆன்லைன் விளையாட்டுகளை முறைபப்டுத்தும் சட்டமசோதா 2022’ நிறைவேற்றப்பட்டது. அதை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்த நிலையில், அந்த மசோதாவுக்கு ஆளுநரின் ஒப்புதல் இதுவரை கிடைக்கவில்லை.

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 70,000 இழந்த பெண்

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு அக்டோபர் 1-ம் தேதி கொண்டுவந்த ஆன்லைன் சூதாட்ட தடை அவசரச் சட்டம் காலாவதியாகியுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு உயிரிழந்த சம்பவம் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.



from Latest News https://ift.tt/JL6WSxd

Post a Comment

0 Comments